பக்கம்:சமுதாயம் ஒரு சைனாபஜார்.pdf/22

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20


அழைப்பு-தெய்வத்தைக் கூப்பிட்டுக் கதறிய அந்த அழைப்பு அவளைத் தலை சுழலச் செய்திருக்க வேண்டும். . நடைபாதை வாசிகளுக்கு மத்தியில் குருகூேடித்திரம் கடந்தது. -

பரிமளம் கால்பாவி கின்ற இடத்தைச் சுற்றிச் சூழ பார்வையிட்டாள். தன்னையும் மீறியதொரு பாதுகாப் பான இடத்தில் ஒதுங்க கேர்ந்த விக்தையையும் அவள் உணர்ந்தாள். அவ்வுணர்வின் தலைவாசலில் கின்ற அவளுக்கு அப்போதுதான் தன்னுணர்வு சிலிர்த்த மாதிரித் தோன்றியது. எப்படியோ நான் தப்பி விட்டேன்’ என்று ம ன த் தி ற் கு ஸ் எண்ணிக் கொண்டாள். அவ்வெண்ணம் கடுகத்தனை நிம்மதியை யாவது கொடுத்ததா? இல்லை, எந்த கிம்மதியும் இனிமே எனக்கு வேண்டாம்; தேவையும் இல்லை! என்று ஆங்காரத்தோடுத் தேம்பினுள் குமரிப் பெண்.

செக்கச் சிவந்திருந்த வலது கை விரல்களில் ஈரம் படர்ந்ததை அறிந்தாள். கண்களைத் தாழ்த்தினுள் கண்ணிர்த் துளிகள் சில விரல்களைத் தஞ்சமடைந்து இருந்தன. என்ன தோன்றியதோ, அவசரம் அவசர மாக அத்துளிகளை புடவை முன்றானையைக் கொய்து துடைத்தெடுத்தாள். இளஞ் சிவப்பு நிறம் பூத்த ரோஜா மடல்களில் விளிமபு கட்டி முத்தம் கொடுக்குமே பணிமணிகள் அம்மாதிரி, அந்த கைலக்ஸ் முக்தியின் ரோஜாப்பூக்களில் அவளுடைய சொந்தக் கண்ணிர்த் துளிகள் பரவிக் கிடந்தன. -

ஏதோ ஒரு காரின் பயங்கரமான ஹார்ன் சத்தம் அவளை எச்சரித்தது. பயத்துடன் அவள் மேல் வசமாக ஒதுங்க முனைந்தாள். சுவர் இடித்தது. பாங்குச் சுவர் வலிக்காதா, பின்னே முதுகைத் தட விட்டுக் கொண்டாள். அவளேயும் மீறிய கிலேயில் அவள் சிரித்து விட்டாள்.

குமாரி பரிமளத்துக்குச் சிரிக்கக்கூடத் தெரி கிறதே...? ...

‘அடிமைப்பெண்’ சிரித்தாள்!