பக்கம்:சமுதாயம் ஒரு சைனாபஜார்.pdf/227

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

225


‘அம்மா! சோறு துண்ணுட்டுத் துாங் கு : ஞாயிற்றுக்கிழமை துளிப் பொழுதுகூட படுத்து எந்திருச்சிருக்க மாட்டே நீ! ரோஜாப் பூ முகம் என்ன மாய் வாடிப் போயிருக்கு நாளேக்கு விடிஞ்சால் ஆபீசுக்குப் போகனுமே நீ?’ என்றாள். ‘எல்லாத்தை யும் காலம்பறப் பேசிக்கிடலாம்” என்றும் முடித்தாள்.

காலையில் அவள் வீரபாகுவோடு சிறுகதை மன்னனைச் சக்திக்க வேண்டும் அல்லவா?

பரிமளம் தனக்குப் பசியில்லை என்று மறுத்தாள். கிழவி கெஞ்சியும் கூத்தாடியும்கூட, அவள் பிடிசோறு உண்ணவில்லை. அதாழிலதிபர் வீரபாகு கெஞ்சியும் சா பிட ஒப்பாத பரிமளம், கிழவியின் பேச்சுக்கு மட்டும் இசைந்து விடுவாளா, என்ன?

‘உன் சோத்தை நீ துண்ணக் கூடாதா?’ என்று மீண்டும் தொல்லை கொடுத்தாள் கிழவி.

பரிமளத்துக்குக் கோபம் வந்து விட்டது. “என் சோறு என்கிற ரகசியம்தான் இந்தக் குப்பத்துக்கும் தெரியும். எனக்கும் தெரியுமே? நீ போய்ப் படுத்துத் துரங்கு” என்று ஆணையிட்டாள் அவள்.

கிழவி அதற்கு மேல் வாய் திறக்கவில்லை.

மெளனமாக கின்ற பரிமளம் தன்னுடைய பள்ளி அறையை அடைந்தாள். ஜமுக்காள வி ரி ப் ைப உதறினுள். விரித்தாள். தன் கையால் பூ வேலை செய்த தலையணை உறை அவள் பார்வைக்கு இலக் கானது, இன்பம் வளர்க’ என்ற வாசகம் அவளைக் கண்டு சிரித்ததோ: ஆணுல் அவளோ உள்ளுக்குள் மனத்திற்குள் விம்மி வெடித்து அழுதாள். புண்ணிய கோடிக் குருக்களின் முகம் அவளது மனக் கண்ணில் கிழலாடியது. அட பாவி!” என்று வீரிட்டாள்.