பக்கம்:சமுதாயம் ஒரு சைனாபஜார்.pdf/228

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

27. சதுரங்கம் ஆடுகிறது:

மேனி கெடுகிலும் படர்ந்து பரவிய வலியின் பிறப் பாம் கெஞ்சம் என்ற உண்மையை குமாரி பரிமளம் தீர்க்கமாக உணர்ந்து கொண்டுதான் பாயையும், தலையணையையும் தஞ்சம் அடைந்தாள். கினைவுகள் விதியின் நிழல்களாக ஒடிப் பிடித்து விளையாட இதயம் அங்வேதனையின் நமைச்சலில் குமைந்து சுழல, இத்தகைய அவல நிலைமையில் அவளுக்கு உறக்கம் பிடிக்கும் என்ற எண்ணம் கிடையாது. என்றாலும், படுக்கை கொண்டாள். சபலம் என்ற விசித் தி, ம் யாரைத்தான் விட்டது? படுத்தவள், கிலே தடுமாறித் தளும்பியது சுடுவெள்ளம். தறிகெட்டுச் சுற்றியது. மன்ம். எண்ணங்களின் விட்ட குறை-தொட்ட குறை யாக புண்ணியகோடி குருக்களைப் பற்றிய ஞாபகம் தீக்கங்காகப் பற்றியது. ‘அட, பாவி!” என்று விரிட்டலறிய அவள் குரல் அவளை மட்டும்தா ைகுலை நடுக்க வைத்தது?-பாவம், கிழவி மங்காத்தா8ளயும் அல்லவா திகைப்படையச் செய்து விட்டது:

‘அம்மா...பரிமளம்’ என்று பதறித் துடித்த வளாக ஓடி வந்தாள் கிழவி. எட்டடிக்குச்சுக்குள் ஒண்டிக்கிடந்தவள், ராமையாவைத் த ண் டி க் கொண்டு ஓடி வந்தாள். “ஏம்மா அலறினே? பாவின்னு, சொன்னியே யாரம்மா? அந்தப் பாவியைப் பத்திச் சொல்லு இப்பவே ஒடிப்போய், அவனைச் சாறு பிழிஞ்சு அவன் ரத்தத்தைக் குடிச்சுப்பிடுறேன். அப்பத்தான் அம்மா நான் உன் அம்மாவுக்குக் கொடுத்த வாக்கை நிறைவேற்றினவளாக ஆக முடியும்’ என்று வீரம் பொங்க-வெஞ்சினம் பறக்கச் செப்பினுள்.

எழுந்து உட்கார்ந்து பரிமளம் ஹரிக்கேன் வெளிச் சத்தில் கிழவியின் சோர்ந்து தளர்ந்த முகத்தை ஊடுருவிப் பார்த்துவிட்டு விரயமான சோகம் மூள