பக்கம்:சமுதாயம் ஒரு சைனாபஜார்.pdf/234

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

232


திங்கட் கிழமையைப் பற்றி கினைத்துக் கொண்ட பரிமளத்திற்கு, அன்று சிறுகதை மன்னன் அதிவீர ராம பாண்டியனைச் சக்தித்தாக வேண்டிய திட ம் பற்றிய ஞாபகம்தான் முதன் முதலாக எழத் தொடங் கியது முன்பெல்லாம் மிஸ்டர் பாண்டியனைச் சக்திப்ப தென்றால், மனத்துக்கு எவ்வளவு இதமாக இருக்கும்! இப்போது ஏன் என் மனம் இனம் விளங்காமல் தவிக் கிறது? மலரும் தென்றலுமாக இணைந்து பிணைந்து இருந்த எங்கள் காதல் எப்படி எப்படியெல்லாம் திசை திரும்பிப் போய்விட்டது?’ என்ற கி இன வு க ள் எழுந்தன.

அவள் விழிகள் கசியத் தொடங்கின. கெஞ்சின் அழுகை கண்களில் வழிந்தது. பெருமூச்செறிந்தாள். அழகான இளம் மார்பகத்தில் செல்லப் பிள்ளை பாகத் தவழ்ந்து கிடந்த தங்கச் சங்கிலி மார்பின் மையத்தில் எம்பி அடங்கிவிட்டது. புடவையைச் செம்மைப்படுத் தியவளாக எழுந்தாள்.

கிழவி மங்கத்தா குறிப்புணர்ந்து வெந்நீர் வைத்து இறக்கி வைத்திருந்தாள்.

‘அம்மா குளிச்சிடு!’ என்று கினைவு படுத்திள்ை. கிழவிக்கு பரிமளம்-பாண்டியன் புதிய சக்திப்புத் திட்டம் பற்றின விவரம் தெரியாது. பரிமளம் இது வரை சொல்லவில்லை. இந்தச் சந்திப்பு கிழவியிடம் சொல்லத் தக்க வகையில் அப்படி ஒன்றும் முக்கிய மானதல்ல என்ற கருத்துக் கொண்டிருந்தாள் பரிமளம். ஆகவேதான் சொல்லவில்லை போலும்:

குளிக்கச் செல்லும் முன், உடுத்துக் கொள்ள வேண்டிய புடவையை எடுக்க டிரங்குப் பெட்டியைத் திறந்தாள் பரிமளம். இளங்காலைப் பொழுதின் மஞ்சள் கிரணங்கள் திறந்து கிடந்த பெட்டிக்குள் விளையாடத் தலைப்பட்டன. மேல் வசமாக இருந்த டெர்லின் நைலக்ஸ் சேலையை எடுத்தாள். வெளிர் ரோஸ் கிறம் எடுப்பாக இருந்தது. அதே நிறத்தில் இருந்த சோளியையும் எடுத்தாள்.