பக்கம்:சமுதாயம் ஒரு சைனாபஜார்.pdf/235

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

233


அக்தப் புடவையையே இமை மூடாமல் சிக்தனை வசப்பட்ட நிலையில் பார்த்துக் கொண்டு இருந்தாள் பரிமளம். இந்தப் புடவைதான் அன்று என் மானத் தைக் காப்பாற்றியது. அல்ல, என் மான தைக காப்பாற்றியவர் தொழிலதிபர் வீ ர ட | கு. அவர்கள்!...என். அப்பா...ஆம்; அப்பா!-'அப்பா’ என்ற பாசச் சொல்லின் உச்சரிப்பில் அவள் ஓர் அரைக் கனம் தன்னை மறந்தாள். நினைவுகள் முன்னும் பின்னுமாக ஆலவட்டம் சுற்றின. எதை கினைப்பாள்? எதைத்தான் மறப்பாள்?

மாம்பலம் ரயில்வே கேட் வரை தம்முடைய படகுக் காரில் கொண்டு வந்து விட்டுச் சென்றார் வீரபாகு, வீடு வரை வருவதாகச் சொனனர் அவர். ஆனல் பரிமளம்தான் வழியிலேயே இறங்கி விட்டாள். பங்களா வாசியான அந்தப் பெரும் பணக்காரர் சன் , டைய ஏழ்மைக் குடிலைத் தரிசிப்பானேன் என்ற கினைப்பு ஒரு புறம்; அவர் வந்தால், அவரை எங்கே உட்கார வைப்பது. எப்படி வரவேற்பது என்ற தவிப்பு மறுபுறம்; இத்தகைய காரணங்களின் நிமித்தம்தான் அதிவீரராம் பாண்டியனைக்கூட அவள் இங்கு அழைத்து வர ஒப்பாமல் இருந்தாள் சூழ்நிலை தன் பக்கம் சாதகமாக அமைந்து விட்டால், ஒரு காளைக்கு அவள் பாண்டியன இங்கு அழைத்து வநது உபசரிக்கத்தான் போகிருள்: அதே மாதிரி வீரபாகு வையும் அழைக்கத்தான் போகிருள்!

கீற்றுத் தடுப்புக்குள் நுழைந்தாள் பரிமளம். பிரஷை எடுத்தாள். மனதிற்குள் சிரிப்பு மூண்டது. தன் நிலையை எண்ணித்தான் அந்தச் சிரிப்பு பீரிட்டது. வீரபாகுவின் பங்களாவில் தங்கிக் கழித்த பொழுது களில் கி ைடத் த வசதிகள் கினை வில் குமிழ் பறித்தன. அங்கு பொத்தானை அழுத்தினுல் சுடுநீர் கொட்டும், இங்கோ?-பின், சிரிப்பு வ ர | ம ல் இருக்குமா?

ரோடி நீர் சொட்டும் குழற்கற்றையை அள்ளிச் செரு கிய வண்ணம் குழலின் உட்பகுதியை அடைந்தாள்.