பக்கம்:சமுதாயம் ஒரு சைனாபஜார்.pdf/248

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

246


புறப்படப் போனுள் சரளா, டம்பப்பை பச்சை டயரி கைக்குள் முடங்கியிருந்தது.

“ உ ங் க ள் புகைப்படத்தை மறந்துவிட்டுப் போநீங்களே, சரளா ?”

“என் புகைப்படமா?*

  • மன்னியுங்கள். உங்க புகைப்படமல்ல!-மிஸ்டர் பாண்டியனின் படம்!”

குறுக்கிட்டார் வீரபாகு. “மிஸ்டர் பாண்டியன் படம்! ஒ!...இது சரளாகிட்டே எப்படி வந்திச்சு! ஏன் வந்திச்சு?” என்று கேள்வி கேட்டார் அவர்.

  • சரளா பத்திரிகை கிருபர் மட்டுமில்லிங்க, அப்பா! அவங்க பெரிய இலக்கிய ரசிகை. அது மட்டுமல்ல. புகைப்படங்களைச் சேகரிப்பது அவங்களோட ஹாபி’ யாகும்!” என்று விளக்கினுள் பரிமளம்.

‘இஸ் இட் ஸோ?...ஒ!...” என்று பொய்யாகச் சிரித்தார் வீரபாகு, -

அச் சிரிப்பின் தன்மையை பரிமளம் மாதிரி சரளாவால் இனம் கண்டு கொள்ளக் கூடவில்8ல. தான்! -

சரளா, உங்களுக்கும் சினிமா நேசன் என்கிற எல்லோ மாகஸினுக்கும் பரிச்சயம் உண்டா?’ என்று குரலை இயல்பாக்கிக் கொண்டு விசாரித்தார், செல்வந்தர் வீரபாகு.

இக்கேள்வி சரளாவின் அழகிய முகத்தை ஏன் இப்படி களையிழக்கச் செய்து விட்டது? முகததை

வந்து...இல்லைங்க...கோ.கோ! உண்டுங்க, என் தொழிலே பத்திரிகைகளுக்கு செய்திகள் சேகரம் செய்து கொடுப்பதுதானுங்களே, ஐயா?” என்இத் தடுமாறினுள் சரளா. o -