பக்கம்:சமுதாயம் ஒரு சைனாபஜார்.pdf/255

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

253


வீரபாகு காரை அடைந்து மீண்டார். ‘அம்மா இதையும் அணிந்து கொள்!” என்று கெஞ்சியவராக 8ல்யுயர்ந்த வைர் நெக்லஸ் ஒன்றையும் கொடுத்தார்.

பரிமளம் தயங்கினுள். சரளா சற்றுமுன் வீரபாகு வின் கெட்ட சகவாசத் தன்மையைப் பற்றிக் குறை: கூறிய சொற்கள் அவள் கெஞ்சில் சூறைக் காற்றாக வீசினவோ? சரளா சொன்னது மெய்தான? வீரபாகு கண்ட கண்ட பெண்களோடு சுற்றி அலைபவர். அவர் என் பேரில் கொண்டுள்ள துய்மை மிக்க பாசத்தை உணர இந்த உலகம் தவறி விடுமோ?...அவரது பொதுவான கெட்ட புத்தியைக் கொண்டு என்பால் கொண்ட பாசத்தையும் உலகம் தன் இயல்புப் பிரகாரமே தப்பாகத்தான் எடை போடுமோ? அதன் வி2ளவாகத்தான், சினிமா நேசன் மஞ்சள் பத்திரிகை எங்களைப் பற்றித் தப்பும் தவறுமாக அபவாதச் செய்திகளை வெளியிட்டதோ? சிந்தனைகள் படம் எடுத்தன.

‘என்னம்மா யோகிக்கிறாய்?...பல தீய குணங்: களுக்கும் ஈ எக என்னுள்ளே இயங்கும் தூய்மை பாசம்தான் உனக்கு இந்த ங்ெக்லஸைக் கொடுக்கிறது. நீ என் வரை தெய்வம் அம்மா, உன் அப்பாவின் அன்புப் பரிசம்மா இது என்றார், கண்களைத் துடைத்துக் கொண்டே.

பரிமளத்தின் பார்வையில் அவளது தங்கச் சங்கிலி ஊசலாடியது. இதுவும் வீரபாகு கொடுத்த பரிசில் தானே? புன்னகையுடன் வாங்கி அணிந்து கொண் டாள். ‘என்னுள் ஊற்றெடுக்கும் பாசத்தின் தெய்வம் நீங்கதான் அப்பா’ என்றாள்.

‘கான் பாக்கியசாலி என்பதை மறுபடியும் கீ கினைவூட்டுகிறாய் தானே, சரி வா’ என்று கூறி முன்னே நடக்கலானுர் வீரபாகு,

பங்களாவுக்குக் காவற்காரன் வேண்டாமோ?

காணுேம்.