பக்கம்:சமுதாயம் ஒரு சைனாபஜார்.pdf/259

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

25?

குறுக்கீடுகள் வந்தாலும் சரி, எத்தனை இடர்பாடுகள் ஏற்பட்டாலும் சரி; நான் என் கனவை-என் முதற் காதலை வெற்றி பெறச் செய்யாமல் இருந்தால் நான் பரிமளம் அல்ல!... சமுதாயம் ஏசும். பேசும்! ஏசட்டுமே பேசட்டுமே!...பார்க்க அழகாகத் தோன்றும் சைை பஜாரிலே பார்க்க முடியாத-பார்க்கக் கூடாதபார்க்கப் பயங்கரமான ஆபத்தும், சோதனையும் மூடி மஜைக்து இருக்கிறதல்லவா? அது மாதிரிதான் இந்த் தமிழ் சமுதாயமும்!. ஆமாம். சமுதாயம் ஒரு சைஞ. பஜார்!...அதுதான் உண்மையின் நிலவரம்!...இந்தச் சமுதாயத்தைச் சாடவல்லவள் இந்தப் பரிமளம்இவள் மகா துர்க்கை. இந்த உண்மையை இதே தமிழ்ச் சமுதாயம் உணரும் காலம் வெகு துரத்தில் இல்லை. என்னைப் பாண்டியனும், வீரபாகு அப்பாவும் புரிந்து கொள்ளக்கூடிய காலம் வெகு சீக்கிரம் வரத் தான் போகிறது!...”

புதிய உணர்வும் நூதனமான உள்ளமும் விங்தை யான விழிப்பும் பெற்றவளாகத தலைகிமிர்ந்தாள் பரிமளம். வீரபாகு இரண்டாவது சிகரெட்டையும் விசி விட்டதை அறிந்தாள் அவள். டெர்ரிலின் கைலக்ஸ் புடவையின் முக தலைப்புறத்தை எடுத்து, கழுத்தின் புறப்பகுதியிலும் நெற்றித் திட்டிலும் சிவந்த கன்னங் களிலும் முத்தார்க் திருந்த வேர்வையைத் துடைத்துக் கொண்டாள். இப்போது அந்தத் திருஷ்டி மச்சம் முன்னைக் காட்டிலும் கூடுதலான அக்தம் பெற்று விளங்கியது. ஒடிக்கொண்டிருந்த நினைவுகளினின்றும் ஒதுக்கி அல்லது ஒதுக்கப்பட்ட நிலையில் மோகினி மாதிரி காந்த எழில் படைத்த குமாரி சரளாவின் ஞாபகம் அதை யொட்டி சினிமா கேசன் மஞ்சள் ப்த்திரிகையின் வினையாட்ட மும் தோன் றி யது. மண்ணிடைப் பிறந்துவிட்ட கடமைப் பாக்கியத்தின் நன்றியை மறந்து விடாமல் அதே சமயத்தில் வாழும் வாழ்க்கை விளையாட்டில் எந்தச் சோதனையையும் எதிர்த்துச் சாடும் தீரத்தின் உள்ளம் கொண்டு அவள் அதிவீரராமபாண்டியனின் அந்தக் கடிதத்தைப் படிக்க