பக்கம்:சமுதாயம் ஒரு சைனாபஜார்.pdf/261

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

259


இடுக்கண் வரும்போது சிரிப்பதென்பது கம்ப சூத்திரம் அல்ல என்பதை உணர்ந்தவளாக, சலனமற்ற ரீதியில் சிரித்தாள் குமாரி பரிமளம்!

அச்சிரிப்பைக் கேட்ட தொழிலதிபர் வீரபாகு பரிமளத்தை கோக்கி நெருங்கி வந்தார். அவளது அழகான சிரிப்பு அவருக்கு அமைதியை ஈர்ந்தது போலும் நல்ல முடிவைத் தானே மிஸ்டர் பாண்டியன் சொல்லியிருக்கார்?’ என்று அவளிடம் கேட்டபோது, அவர் பார்வையில் உறையின் மீது எழுதப்பட்டிருந்த கேர் பார்வைக்கு’ என்ற எச்சரிக்கை பட்டது. -

“ஆமாங்க, அப்பா!’ என்றாள் பரிமளம், இயல் பான சிரிப்பு மாருமல்.

‘பேஷ்! அப்படின்,ை இந்த ஐப்பசியிலேயே முகூர்த்தத்தை வச்சுக்கிடலாம்!”

‘உங்க விருப்பம் போலச் செய்யுங்க!”

வட்டக் கருவிழிகள் பாங்குற விரிந்தன. எடுப் பான நாசி எடுப்பான ஏற்றம் கொண்டு விரிந்தது. உதடுகள் கவர்ச்சியோடு பிரிந்தன. மலர்ச்சிரிப்பு விளைந்தது.

‘உன் விருப்பம்தான் அம்மா என் லட்சியம்!” கல்யாணத்தை ஜாம் ஜாம் என்று ஆபட்ஸ்பரியிலேயே கடத்திடலாமனு முடிவு செஞ்சிட்டேன்; அன்றைக்கே சுவீகார ஏற்பாட்டையும் நிறைவேற்றிக்கிட்டாகணும்.

பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்த சமயற்காரர் காசி ஒடிப்போய் இரண்டு கோப்பைகளில் காப்பி கொணர்ந்து நீட்டினுர்,

இது சம்பந்தி காப்பியாக்கும் என்று விமர்சனம் செய்தவாறு அவராகவே வலியக் கைநீட்டி கோப் பையைப் பெற்று அருந்தினர்.

அவளும் அவ்வாறே செய்ய முயன்ற நேரத்தில் கசங்கிய பத்திரிகை ஒன்று பறந்து அவள்து