பக்கம்:சமுதாயம் ஒரு சைனாபஜார்.pdf/264

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

262


சமுதாயப் பார்வையும் ஆன்மீகப் பார்வையும் வெறும் வாய்ப்பக்தல் தானே? இவ்வுண்மையை என் மாதிரி இந்தச் சமுதாயமும் உணர வேண்டாமா? உணர முடியாதா?-தலை கனத்தது.

அப்போது தோழி தேவமனுேஹரி அங்கு வந்தாள். *செளக்கியமா?’ என்று கேட்டாள்!

  • நல்ல செளக்கியம்: ‘

மறு ஐந்தாவது நிமிஷத்தில், அங்கே போலீஸ் ஜிப் ஒன்று வந்து கின்றது. குமாரி பரிமளத்தின் விழிகள் விரிந்தன!

33 மிஸ்டர் ஜகதலப் பிதாபன்

சிறு கதை மன்னகைப் பட்டம் சூட்டிக்கொண்ட அதிவீரராம பாண்டியனின் அழகான பங்களாவின் வாசலில் வந்து நின்ற ஜீப்பிலிருந்து சட்டத்தின் காவ லர்கள் பின் தொடர எஸ். ஐ. சாந்தலிங்கம் கம்பீரமான மிடுக்குடன் இறங்கி கடந்தார். ஏறுமுகக் கதிரவனின் சூடு பரவிய செங்கதிர்கள் சட்டத்தின் பிரதிநிதிகளின் மேனிகளில் பரவின, -

அதிவீரராம பாண்டியன் வெளியே போயிருப்ப தாகச் சமையல்காரர் காசி சொல்லி விட்டுக் கொடுத்த அந்தக் கடிதத்தைப் படித்து முடித்த குமாரி பரிமளம் அருகில் கின்ற தொழிலதிபர் வீரபாகுவின் மனதை புண்பட வேண்டாம் என்று கருதி, கற்பிக்கப்பட்ட ஒரு பொய்யை நெஞ்சறிந்து கூறி அவரை அனுப்பிவிட்டு அங்கே காத்திருந்த அவள், போலிஸ் ஜிப்பைக் கண்டதும் அதிர்ச்சியடையாமல் தப்ப முடிய்வில்லை. “இன்று புதியதாகப் பிறந்திருக்கிறேன்! என்ற தன் னம்பிக்கைப் பிடியில்-மனத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டு நெஞ்சில் புயலை-எரிமலையை-பூகம்பத்தை