பக்கம்:சமுதாயம் ஒரு சைனாபஜார்.pdf/271

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

289

‘இந்தப் பத்திரிகையில் உள்ள இந்தப் பெண்ணை’ என்று ஆள்காடடி விரலால் காட்டினர் சாக்தலிங்கம். கரிய பெரிய விழிகள் விரிந்தன. அழகான வீரம் மிக்க மீசை ஏறி இறங்கியது.

‘பெயர் பரிமளம்! என் இனக் காதலிக்கிருள். என்ல்ை அந்தக் காதலைத் திருப்பிக் கொடுக்க முடிய வில்லை என்றான் பாண்டியன்.

குமாரி பரிமளத்தின் மேனி நடுங்கியது. “எஸ்.ஐ லார்! :ான் பேச அனுமதி கொடுப்பீர்களா?’ என்று கேட்டாள்.

சப் இன் ஸ்பெக்டர் அந்த மஞ்சள் பத்திரிகையின் தலைப்புச் செய்தியைத் தொடர்ந்து, அடியில் கிறுக்கி யிருந்த விவரங்களைப் படித்துக் கொண்டிருந்த உண்மை நிலையை அவள் உணரவே செய்தாள்.

கண்களை மேலே உயர்த்தினுர் அதிகாரி, ஊம்’ கொட்டினர்.

“என்னைக் காதலித்தார் இவர். நான் இவரது எழுத்துக்களைக் காதலித்தேன். இப்போது அவர் மனம் மாறி விட்டார். என்னுல் அப்படி மனம் மாற முடியவில்லை ஆனுல் நான் கலியாணம் செய்து கொள்வதானுல் இவரைத்தான் கல்யாணம் செய்து கொள்வேன்’ என்றாள் குமாரி பரிமளம். • ,

‘நீங்கள் படித்துக் கொண்டிருக்கிறீர்களே அந்தப் பத்திரிகையில் என்னைப் பற்றியும் என் தந்தையான வீர பாகு அவர்களைப் பற்றியும் யாரோ கொடுத்த அபவாதச் செய்திகளை நம.பி வெளியிட்டிருக்கிறார்கள் . இவரும் நம்பி விட்டார். நீங்கள் நம்பக் கூடாது லார்!’ என்றும் தொடர்ந்தாள். குரல் தழு தழுத்தது.

பாண்டியன் கேலியாகச் சிரித்தான்.

காவல் அதிகாரி வேடிக்கைப் பார்ப்பது போல ல்ரிமளத்தை ஊடுருவினர்.