பக்கம்:சமுதாயம் ஒரு சைனாபஜார்.pdf/273

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I

நான் உன்னைப் பற்றி ஏளனமாகப் பேசி விட்டேன். கம் காதல் விவகாரம் என்றாவது பைசல் ஆக வேண்டி யதுதானே? சமூகம் என்பது நாலு பேர்! ஒன்றிரண்டு பேர் அல்லது குறைய இருப்பதில் தவறில்லை. இந்தச் சமுதாயத்தின் மத்தியில் நான் என் நிலையை உன் நிலையை அம்பலப்படுத்தியதில் தவறேது? தற்போது நீங்கள் இனி புறப்படலாம்! திருவாளர் வீரபாகு உங்க ளுக்காக காத்திருப்பார்!’ என்று கள்ளமாகச் சிரித். தான் சிறுகதை மன்னன்.

“மிஸ்டர் பாண்டியன்!...பண்போடு பேசுங்கள். மகளுக்காகத் தந்தை காத்திருப்பது சகஜம்தானே? இந்தப் பரிமளத்தை மறுபடியும் கினைவு படுத்திக் கொள்ளுங்கள். நானே விதி நானே உங்கள் விதி: உங்களுக்கு விதி!...பொய் பேசினுல் தெய்வம் கண் களே அழித்து விடும் என்பார்கள்! உங்கள் கண்களே அழிக்கத் தெய்வம் தேவையில்லை! நான் ஒருத்தியே போதும்! மீண்டும் சொல்கிறேன். என் தோழியின் முன் சொல்லுகிறேன்!...நீங்களே என் கணவர்!... நீங்கள்தான் எனக்கு மாலையிடப் போகிறீர்கள்!... இது. உண்மை! நான் மதிக்கும் என் கற்பின் மீது ஆணை இது! அன்றாெரு நாள் இரவில் நான் உங்கள் முன் வைத்த சபதததை நான் மறந்து விடவில்லை! இனி நீங்கள்தான் எச்சரிக்கையோடு மனிதராக-பிரபல எழுத்தாளர் அதிவீரராம பாண்டியனுக நிலவிப் பழக வேண்டும். ஆமாம்!...என் அப்பா எனக்காகக் காத் திருப்பார்! போகிறேன்!...போய் வருகிறேன்!...நீங்கள் மனிதராகி விடுங்கள்!...'டைம் கொடுக்கிறேன்!”

புயலாக மறைந்தாள் குமாரி பரிமளம்!

பாண்டியனை மாடி அழைத்தது போலும்: