பக்கம்:சமுதாயம் ஒரு சைனாபஜார்.pdf/274

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34. எங்கே சமூக நீதி?

கனவுத் தென்றலாகப் புறப்பட்டு அதிவீரராம பாண்டியனின் பங்களாவை மிதித்த குமாரி பரிமளம் சோகப் புயலாக அங்கிருந்து புறப்பட்டாள் கினைவுகள் கனவுகளாகவும் கனவுகள் கினைவுகளாகவும் மாறியமாற்றப்பட்ட மனநிலையையே துணையாக்கி வழி மிதித்து வழி பிரித்து கடந்தாள் அவள் இதயம் துடித்தது. வலது கண் படபடத்தது, தோளில் சரிந்து கிடந்த டெரிலின் நைலக்ஸ் புடவையைச் சமப்படுத்திக் கொண்டே கடையைத் தொடர்ந்தாள். உடுத்துயர்ந்த இந்தப் புடவை அவளுக்குத் தொழிலதிபர் வீரபாகுவின் அறிமுகத்தை கினைவு படுத்தியது. மார்பில் ஊசலாடிக் கொண்டிருந்த தங்கச் சங்கிலி அவரது அன்பைப் பிரகடனப் படுத்திக் கொண்டிருந்தது; இடது கை மணிக்கட்டில் நுழைந்த லே டிஸ் ரிஸ்ட் வாட்ச்’ அவரது பாசத்தை அஞ்சல் செய்து கொண்டிருந்தது. “அப்பா? அப்பா!...” என்று அவளது உள் மனம் விம்மி வெடித்தது. அழுது புலிம்பியது; காது வளையங்கள் இரண்டும் விதியாகவும் வினையாகவும் சுழன்றாடின!

செங்கதிர்ச் செல்வனின் இளம் பொற்கிரணங் களிலே இப்போது சூடு பரவத் தொடங்கியிருந்தன.

பரிமளம் டம்பப் பையைப் பிரித்தாள். சிறுகதை மன்னன் அதிவீரராமபாண்டியனின் கடிதம்- தனக்கு அவர் எழுதிய கடிதம்-முடிவை உறுதிப்படுத்திச் சொல்லிக் காட்டிய அந்தக் கடிதம் பத்திரமாக இருக் கிறதா என்று பாாக்கவே-சோதித்துப் பார்க்கவே

அவள் டம்பப் பையைத் திறந்தாள்.

பாண்டியனின் கடிதம் பத்திரமாகவே இருந்தது!

பாண்டியன் கடிதம் மாதிரியே பாண்டியன் பால் கான் கொண்டிருக்கும் காதலும் பத்திரமாகத்தான்