பக்கம்:சமுதாயம் ஒரு சைனாபஜார்.pdf/276

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

274


கொண்டாள். மாடியில் மிஸ்டர் ஜெகதலப்பிரதாபனுக காட்சி தந்த பாண்டியனை அவள் சக்திக்கவில்ஜல என்றாலும் அவளுக்கு அவனைப் பற்றிப் பூரணமாகவே தெரிந்தது என்று தான் மனப்பூர்வமாக நம்பினுள்.

“மிஸ்டர் பாண்டியன்! நீங்கள் நல்லவர் அல்லர்!ட இது உங்களுக்குத் தெரிந்த உண்மை. இவ் வண்மையை கானும் புரிந்து கொண்டேன் எப் போதோ புரிந்து:கொண்டேன். ஆல்ை நான் கல்லவள் அல்லள் என்று ஏசியிருக்கிறீர்களே உங்கள் கடிதத் திலே?-அதற்குக் காரணம்?-அதற்குச் சாட்சி?... கேள்வி அவள் மனக்கண் முன்னே விசுவரூபம் எடுத்தது. பாண்டியனின் இந்தக் குற்றச் சாட்டுக்கு அடிப்படைக் காரணம் சினிமா நேசன மஞ்சள் ஏட்டின் அங்யாயமான-பொய்யான நேர்மையில்லாத அபவாதச் செய்திகள் தான்!... புரிகிறது!... அந்தக் காரணம் ஆதாரமற்றது என்பதை நிஜமாகவே பாண்டியன் புரிந்து கொள்ளத் தவறி விட்டாரா?. சாட்சி இல்லாத ஒரு குற்றச்சாட்டை எப்படி கம்பினர் அவர்?... அவள் கெஞ்சத்தின் கேள்விக்குப் பதில் சொல்ல வேண்டிய பொறுப்பாளி பாண்டியன் அல்லவா? விழிகள் கசிந்தன. -

சமுதாயத்தின் பிரதிநிதிகளான மனிதர்கள் தங்கள் தங்கள் சிந்தனைகளை வழி நடையாக்கி நடந்து கொண்டும் பேசிக் கொண்டும் இருந்தார்கள்.

குமாரி பரிமளம் விழிப்புக் கொண்டாள். தொழி லதிபர் வீரபாகு-என் தந்தை அன்று என் மானத்தைக் காத்த தெய்வம்! ...அன்றைக்கு சரளாவின் மோட்டார் சைக்கிளில் என் மானத்தைப் பறிக்கச் சதி செய்த போது, வீரபாகு அவர்கள் மட்டும் காரில் வந்து ஆபத் துக்கு உதவியிருக்காவிட்டால் அப்போதே என் மானம் கப்பல் ஏறியிருக்கும். நான் கிர்வாணக் கோலத்தில் நடுச்சந்தியில் கின்றிருப்பேன்?...அப்படிப்பட்ட ஒரு மகத்தான உதவியைச் செய்தவர் வீரபாகு!...அவர் என் தந்தைக்கு கிகரானவர்!...அத்தகைய ஒரு தெய் வத்தை-என்னைத் தன் மகளாக்கிக் கொண்டுள்ள அந்த