பக்கம்:சமுதாயம் ஒரு சைனாபஜார்.pdf/281

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

279


யோசனை செய்தவளாக, ஒதுங்கியபோது டேய், சினிமா கேசன் இந்த வாரப் பத்திரிகையிலே ஒரு பெண் போட்டோ முதல் பக்கத்திலே வெளி வந்திருக்கே, அந்தப் போட்டோவுக்குடைய குட்டி இவள்தாண்டா! ஷோக்காக இருக்காளே! நல்ல பெண்ணடா!...” பலே கைகாரிதான் போல!... இல்லாட்டா, பெரும் பணக்காரரான வீரபாகுவை தன் வலையிலே சிக்கவைத்துவிட முடியுமா?’ என்று ஒரு நாகரிக வாலிபன் அநாகரிகமாகப் பேசிய பேச்சைக் கேட்டாள்.

“ஐயோ தெய்வமே!- தவித்தாள் பரிமளம். சப்-இன்ஸ்பெக்டர் சாந்தலிங்கம் அதோ, ஜிப்பில் பறந்து வருகிறார்.

‘அப்பா!...அப்பா!...”-குமாரி பரிமளம் தரையில் சாய்ந்தாள்!... .

35. பாவத்துக்குக் கூலி

தொழில் பிரமுகர் திருவாளர் வீரபாகுவின் பங்களாவிலே என்றுமில்லாத அமைதி பரிபாலனம் செய்து கொண்டிருந்தது. அந்த ஆழ்ந்த அமைதிக்கு வாய்த்திட்ட சோதனை போன்று, தொலைபேசி பெருங் குரலெடுத்துக் கூச்சல போடத் தொடங்கியது.

மங்களம் இருந்திருந்தால், இக்கேரம் ஓடிவந்து தொலைபேசிக் குரலுக்கு மதிப்புக் கொடுத்திருப்பார்கள். அவள் அப்பொழுது அங்கு இல்லே அவளும் பெங்களுர் பங்கஜமும் சைபைஜாருக்கு இம்பாலாவில் சென்று விட்டார்கள்.-டிரைவர் மஜீத்தின் கடமை உணர்வி, அவனது இயல்பான துப்பறியும் கதை ரசஆனக்கு அப்பாற்பட்டது தான். -

அழத் தொடங்கிய குழந்தை அழுகையை கிறுத்தா . மாதிரி தொலைபேசி அலறிக் கொண்டுதான் இருந்தது. & . . . . . . . .