பக்கம்:சமுதாயம் ஒரு சைனாபஜார்.pdf/284

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

282


‘இந்தா, உடுத்திக் கொள்! கேவலம் ஒரு குள்ள கரி ஒரு வேங்கைகிட்டே வாலாட்ட முடியாது என் கிறதை இப்போவாவது நீ புரிஞ்சிக்கினு இருப்பாய்! ஆன உன்ைேட விளையாட்டு, ஆசைப்பட்டு நீ விளை யாடிய விளையாட்டு என் மகள் பரிமளத்தை முச்சக்தி யிலே மயக்கம் போட்டு விழச் செஞ்சிடுச்சே பாவி :ே இந்தாப் பணம்! ஆயிரம் இருக்கு பாவத்துக்குக் கூலி!” என்று புத்தம் புதிய பத்து ரூபாய் நோட்டுக் களை வாரி வீசினர். ‘ஆட்டோமாட்டிக் காமிராவைப் பத்திரமாக எடுத்து வைத்தார் அவர்.

வரவேற்புக் கூடத்தில் ரம்மியமான அழகு மீண்டும் குடிபுகுந்தது!

பழைய நெடி’ கூட இல்லை! “நீ இனி புறப்படலாம்! என் வேலை முடிந்து விட்டது!’

‘ஓ! உன்னுேட வானிட்டி பாக் வேனுமா? இதோ!” என்று கட கட’வென்று பேய் போலச் சிரித்த படி அந்த டம்பப் பையிலிருந்த பொருள்கள் அனைத்தை யும் எடுத்து காட்ரெஜ் பீரோவில் வைத்துப் பூட்டி விட்டு வெறும் பையை-காலிப் பையை வீசினர்.

‘போ! போய் விடு!” என்று ஆணையிட்டார். “என் மானத்தைப் பறித்தாய் நீ! என் மகளுக்கும் களங்கம் கற்பித்தாய்! இப்போது உன் மானம் என் கையில்!...மறந்து விடாதே, ஒடு!”

மோகினி அவதாரம் முடிந்து விட்டதா என்ன? அந்த முடிவின் ஆரம்பம் என்ன? கஞ்சமலர்ப் பாதங்களின் மெல்லிய ஓசை அடங்கி விட்டது.

கூடம் வெறிச்சோடிக் கிடந்தது! டாக்ஸியின் குழல் சத்தம் கேட்டது. தொழிலதிபர் வீரபாகு கதவைப் பூட்டிக் கொண்டு சாவிக் கொத்தும் தானுமாக வெளி முகப்பிற்கு வந்தார்.