பக்கம்:சமுதாயம் ஒரு சைனாபஜார்.pdf/285

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

383

சூடேறிய வெய்யில் சூடேற்றிக் கொண்டிருந்தது. அப்போது சிறுகதை மன்னன் அதிவீரராம பாண்டியனின் புதிய கார் முகப்பில் வந்து கின்றது!

அந்தக் காரில் பரிமளம் இருந்தாள்! பரிமளம் புழுதியில் வீசப்பட்ட காதவீணையாக காட்சி தந்தாள் :

‘அம்மா பரிமளம்’ என்று தன்னுடைய அந்த ரங்க சுத்தியான பாசம் முழுவதையும் குரலாக்கிக் கூவி அழைத்தபடி, வழிந்த விழிநீரை வழித்துக் கொள்ளக் கூட கினைவிழந்து, பாண்டியனின் டாட்ஜ் காரின் அருகே விரைந்தார் வீரபாகு காரைப் பார்த்ததும், காருக்குடைய நபரைச் சட்டென்று அவருக்கு கினைவு வாவில்லை, காரிலிருந்து இறங்கித் தயக்கம் காட்டி கின்ற பாண்டியனைக் கண்டவுடன்தான், இது மிஸ்டர் பாண்டியனின் கார்’ என்ற உணமை விளங்கத் தொடங்கியது பரிமளத்தோட வருங்காலக் கணவர் மிஸ்டர் பாண்டியன்! என்ற இன்ப நினைவு அவருள் தோன்றியதும், இன்பத் தவிப்பு அவருள் கிளர்க் தெழத் தொடங்கியது. புதிய மலர்ச்சியையும் நூதன மான அமைதியையும் மீட்டுக் கொண்ட நினைவில்கிலையில் அவர் பாண்டியனே நோக்கினர்.

“வாங்க, மாப்பிள்ளே!’ என்று பரிவுடன் வர வேற்றார்.

காரின் பின் கதவைத் திறந்து விட்டபடி மயக்க கிலையில் ஸ்மரனே தப்பிக் கிடந்த பரிமளத்தை எப்படி உள்ளே கொண்டு போய்ச் சேர்ப்பது என்ற பிரச்னை யில் மனம் குழம்பித் தவித்த எழுத்தாளன் பாண்டியன் குழம்பிய கண்களோடு வீரபாகுவை ஏறிட்டு நோக் கின்ை.

அந்தப் பார்வையின் புதிர்ச்சுழலை ஊகிக்க நேர மின்றி, பரிமளாவைக் கூர்ந்து பார்த்த வீரபாகு தலையைத் தாழ்த்தியபடி காரின் பின் ஆசனத்தை அடைந்து, நினைவு தப்பிய பரிமளத்தைத் துாக்கி அணைத்த வண்ணம் தோள்களில் போட்டுக் கொண்டு,