பக்கம்:சமுதாயம் ஒரு சைனாபஜார்.pdf/286

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

284


புதையல் எடுத்தவனின் பூரிப்போடு தன்னுடைய பங்களாவின் அந்தம் நிறைந்த வரவேற்புத்_கூடத்தில் ரத்தின ஜமுக்காளத்தில் கிடத்தினர். அப்போதுதான் அவருக்கு நல்ல மூச்சு திரும்பியிருக்க வேண்டும். வந்து கின்ற டாக்ஸியின் ஞாபகமும் அப்போதுதான் வந்தது போலும்! கைதட்டி கூப்பிட்டு ஒரு ரூபாய்ப்பணத்தைக் கொடுத்தனுப்பினர் பிறகு இரண்டு முறை தொலைபேசியின் எண்களைத் திரும்புத் திரும்பச் சுற்றினர். ஞா ன பண்டிதா! எங்க பரிமளத்தை நல்லபடியாகக் காப்பாற்றிக் கொடு, அப்பனே! என்னுேட இன்பக் கனவையும் நிறைவேற்றி வச்சுடு என்று சூன்யத்தில் கின்றாடி-கிறைந்தாடிப் பழகிய இளமையைக் கைதொழுதார்.

குழப்பத்திற்குட்பட்டவகை, வந்த காலோடு இன்னமும் கின்று கொண்டுதாணிருந்தான்.

“உட்காருங்க!” என்றார் வீரபாகு.

பாண்டியன் அவ்வேண்டுகோளைச் செவிமடுத்த தாகவே தோன்றவில்லை.

எங்க பரிமளம் எல்லாம் சொல்லிச்சு!” “ஓ! அப்படியா?” என்றான் பாண்டியன். வீரபாகுவின் பார்வை பரிமளத்தின் மீது ஆரோ கணித்திருந்தது. என்னவோ எண்ணியவர் போன்று பதட்டத்துடன் கடந்து பரிமளத்தின் மூக்கடியில் விரல்களைப் பதித்துப் பார்த்தார், மறுகணம் அவரது கறுமை உதடுகளிலே அமைதிப் புனனகை நெளியத் தலைப்பட்டது.

‘கான் ஒண்ணும் கம்பர் அயோக்யன் என்று உங்களை முதன் முதலிலே பார்த்ததும் என்னை அறி முகப்படுத்திக்கிட்டதை நீங்க மறந்திருக்க முடியாது. அப்படிப்பட்ட அயோக்யனுக்குக் கிடைத்த ஒரு வரப் பிரசாதம் போல எனக்கு பரிமளம் மகளாகக் கிடைச் சிருக்கு, மிஸ்டர் பாண்டியன்! உங்க கையிலே குறைகள் நிரம்பியிருக்கிற உண்மையை-ரகசியத்தை தெள்ளத் தெளியப் புரிஞ்சுக்கிட்டுங்கூட உங்களோட