பக்கம்:சமுதாயம் ஒரு சைனாபஜார்.pdf/293

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

37. பாரிஜாதப்பூ!

நெற்றிப் பொட்டிலே பேய் அறைந்து விட்ட மாதிரி கண்மூடிக் கண் திறக்கும் அந்த ஒரு நொடிப் பொழுதிலே கதிகலங்கிப் போய்விட்டார் தொழிலதிபர் விரபாகு.

என்ன சொல்கின்றான் அதிவீரராம பாண்டியன்?

சிறுகதை மன்னன் பாண்டியன் என் இப்படித் தீர்ப்பு வழங்குகின்றான்? -

வீரபாகுவின் தந்தை மனம் வெடித்துச் சிதறி விடும் போலிருந்தது.

தன்னை பரிமளத்தின் மாஜி காதலன் என்று டாக்டர் சாரியிடம் அறிமுகப்படுத்திக் கொள்கிருனே பாண்டியன்?...ஐயையோ!... என்ன புதுமை இது? என்ன புதுவினை இது? இவன்தான் விதியா? இல்லை இவனேதான் வினையா? தெய்வமே!...வடிவேலனே!தவித்தார் வீரபாகு, விழிவெள்ள ம் ஆடிப் பெருக்காக வழிந்தோடிக் கொண்டிருந்தது. வெளியே எரித்துக் கொண்டிருந்த புது வெய்யிலின் கொடுமை உள்ளே கின்ற அவரைச் சாடிக் கொண்டிருந்தது தனக்கே உரிய அகம்பாவத்தோடும் தனக்கே உரித்தான மிடுக் கோடும் முடிவு கூறிய பாண்டியனை விழுங்கி விடுபவ ரென ஆத்திரத்தோடு பார்த்தார் அவர் பிறகு அவரது கண் நோக்கு தரையில் கிடந்த நாதவீணையின் மீது இடியது

ஒடிவிட்ட பாக்கியத்தின் ஏமாற்றத்தைத் தாங்க முடியாமல் தவித்து உருகிக் கொண்டிருந்த குமாரி பரிமளம் தன்னுடைய எஞ்சி கின்ற பலத்தைக் காட்டிய வண்ணம் மெல்ல எழுந்தாள். மிஸ்டர் பாண்டியன்!” என்று அன்புடன் ஆதரவுடன் பரிவுடன் குயிலாகக் கூவினுள். கோலச் சிறுவிழிகள் தரை மீன் களாயின. - - -

புறப்படத் தொடங்கிவிட்ட விதி கிற்குமா, என்ன?