பக்கம்:சமுதாயம் ஒரு சைனாபஜார்.pdf/36

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



காலமும் சிந்தனையிலேயே மூழ்கி விடுவானும்!. அப்ப்டித்தான நானும் ஆகிவிட்டேன் போலிருக்கு” என்று அவள் மாதிரியே சன்னக் குரலெடுத்து உரைத் தாள் பரிமளம்.

கம்பியிலிருந்த கைப்பிடி வாரைப் பற் றிக்கொண்டு. கின்ற அல்ட்ரா மாடர்ன்” இளவட்டம் ஒன்று: இப்படியா அவளை முறைத் துப் பார்க்கும்? அழகுக் கன்னிகளே இதுவாையிலும் பார்த்த துே. இல்லையோ, என்னவோ? இதுவரை, எந்தக் காட்டில்

அஞ்ஞாத வாசம் செய்தானே, என்னவோ?

பக்கத்து ஆசனத்தில் ஒயிலாக விற்றிருந்த பெண் ‘கட கட'வென்று சிரித்தாள்.

அப்படியா?. அப்படி யென்றால், உங்களுக்கும் கதை எழுத்தி தெரியுமோ?’ என்று கேட்டாள். கேட்டு விட்டு அவள் பரிமளத்தை விகய பூர்வமான உன்னிப் போடு கூர்ந்து நோக்கினுள். பரிமளத்தின் இடது கன்னத்திலிருந்த அந்த மச்சம் அவளை வெகுவாகக் கவர்ந்தது. பெண்ணுக்குப் பெண் மயங்கும் அழகு. அல்லவா பரிமளத்தோட அழகு”

பரிமளம், கேட்கப்பட்ட கேள்விக்கு விடையாக தலையை உலுக்கி, “அந்தப் பாவத்தை மட்டும் கான் பழகிக் கொள்ளவில்லை’ என்று அழுததமான தொனி யில் ஏமாற்றங்களின் ஆற்றமையோடு வெளி யிட்டாள்.

“அழுவதா, சிரிப்பதான்னு எனக்கு விளங்கல்லே, பரிமளம்’ என்று சொன்னுள் அந்தக் கறுப்புத் திராட்சை அழகி. “என் பெயரையும் நீங்க அறிஞ் சுக்கிட விரும்பாமல் இருக்கமாட்டிங்கன்னு எதிர்பார்க் கிறேன்’ என்றும் தெரிவித்தாள்.

சொல்லுங்க சகோதரி. சொல்லுங்க; நானே

கேட்கலாம்னு துடிச்சுக்கிட்டிருக்கேன். அதுக்குள்ளே வேறு என்ன்மோ சிந்தனே!”