பக்கம்:சமுதாயம் ஒரு சைனாபஜார்.pdf/71

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

r

6

கிடைக்கும்; என் மங்களத்துக்கும் கிம்மதி கிடைக் கும்! மனப் பாம்பு நினைவுச் சட்டைகளை உரித்தது.

வீரபாக, சற்றுமுன் தொலைப்பேசியில் அழைத்துப் பேசிய அதிவீரராமபாண்டியனைப் பற்றி எண்ணம் இட்டார்.

கேர்மையான - சத்தியமான - மனிதாபிமானம் கொண்ட ஒரு எழுத்தாளன்தான், சமுதாயத்தின் முதற் காவலன்! ஆ கு ல், இந்த அதிவீரராம பாண்டியனுேட வக்கிரச் சித்தாக்தமும் விபரீதமான வாழ்க்கை முறையும் தான் அவரோட கதைகளுக்குக் கருவாகின்றன: மற்றவங்களைச் சமுதாயப் புல்லுரு, என்று சொல்கிற இந்தப் புண்ணியவான்தான் ஒண்ணும் நம்பர் விரோதி:

இவனே கம்பியிருக்குதே எங்க பரிமளம்.!...என்ன ஆகுமோ, எப்படி முடியுமோ என்கிறது ஒரு பெரிய சஸ்பென்ஸ்ாக இருக்குது!...ஆனு, எங்க பரிமளம் இதை அதிவீரராம பாண்டியனே லேசில் கம்மா விட்டு விடாது. ஆமா, அது மட்டும் கிச்சயம்.”

தம்மைச் சக்திக்க மாலையில் வருவதாகக் கூறிட: அக்தச் சிறுகதை மன்னனின் வார்த்தைகளையும் அவர் மறந்து விடவில்லை.

பரிமளத்தைப் பெயரிட்டு அழைத்தார் வீரபாகு,

பரிமளம் நடந்து வரும் அழகாக- நடத்தி வரும் அழகின் சிரிப்பாக பையப் பைய கடந்து வந்து கின்றாள். பதட்டத்தோடு பதட்டமாக, மறுபடியும் தலையைக் குனிக் து, தன்னுடைய சோளியின் மேல் பொத்தான் சரிவர பொருத்தப்பட்டிருக்கிற என்று சோதித்துக் கொள்ளவும் அவள் மறந்து விடவில்லை. வலது கைப் பூவிரலால் நெற்றியில் பாதை தவறிக் கிடந்த இரண்டொரு மயிரிழைகளைக் கோதி விட்டுக் கொண்டே, ‘என்னுங்க ஐயா?’ என்றாள்.

இப்போது இவள் கைகள், காது வளையங்களிலும் மார்புச் சங்கிலியிலும் மாறி மாறி விளையாடின.

சை.-5