பக்கம்:சமுதாயம் ஒரு சைனாபஜார்.pdf/77

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

75


திருந்ததோ! மூச்சுக் காட்டவில்லை. அவள் மூச்சு விட்டாள். எனக்கு இங்கிலீஷ் ஞானம் இல்லீங்க பங்கஜம் எஸ்.ஐ ஆம் ட்ரூ!...” என்றாள்.

சிரித்தாள் பங்கஜம். எதையும் மெல்லியதாக எடுத்துக் கொள்ளப் பழகிய சிரிப்போ?

  o  )

வீரபாகுவின் உதட்டுக்கரையில் கமட்டுப் புன்னகை அலைமோதியது; கான் ஒரு காளைக்கு ஆயிரம் வாட்டி சொல்வேனே பங்கஜம், பங்கஜம்னு, அந்தப் பொண்ணு இதுதான்!” என்று மனைவியிடம் தேரிவித்தார் அவர்.

‘அப்பவே! புரிஞ்சுக்கிட்டேனுங்களே அத்தான்!” என்று பான்மையுற முறுவல் சேர்த்தாள் வீரபாகுவின் இனியபாதி.

‘லிஸ்டர் ரொம்ப குறும்புக்காரங்க போலிருக்கு. பேச்சு பூராவுமே ரொழ்ட அழகாய் வந்து விழுதே!. ஊம், இவங்களே இப்படியென்றால்; உங்க குழந்தை குட்டிகளோட குறும்புத்தனத்துக்கு எ ல் லே யே இருக்காது:- என்று களிமிளிரச் .ெ ச ல் லி க் கொண்டே, இடது தோனில் தொங்கிய ஏர்ரிட்ஸ்’ பையை எடுத்து அதிலிருந்து வட்டவடிவமான ஒரு டப்பாவை எடுத்தாள் பங்களுர்ப் பங்கஜம்.

உறுமிப் பாயத் துடிக்கும் பயங்கரப் புலி அக்த டப்பாவின் முகப்பில் தரிசனம் கொடுத்தது.

விாபாகு-மங்களம் தம்பதி கல்லாய்ச் சமைந்து விட்டார்கள்.

‘விஸ்டர், உங்க குழந்தைகளைக் கூப்பிடுங்க!”

வீரபாகுவின் கெஞ்சத்திலே மடைகட்டியிருந்த கண்ணிர், கண்களுக்கு மே லே பொங்கியது. ‘மங்களம்’ என்று தாழ் குரலில் அழைத்து, பரிவுடன் அவள் கண்களைத் துடை த்தார் உடைமைக்காரர்.

‘பரிமளத்தை அறிமுகப்படுத்த மறந்திட்டேனே!