பக்கம்:சமுதாயம் ஒரு சைனாபஜார்.pdf/8

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6

தமிழோடு விளையாடும் திருமுருகன், படைப்பின் தவத்தோடு-தார்மீகத்தின நீதியோடு-நியதியின் விதியோடு நின்று, அக்த வெள்ளி ஐந்தடுக்குத் தீபத்தின் நெஞ்சுருக்கும் ஆராதனையை ஏற்றுக்கொண்டே இருக்கிறான்!

ஆஹா! மறை நாயகனின் அந்த அருட் புன்னகையை வருணிக்க பாலவாய்ப் பசுந்தமிழுககுத் தானே தெரியும்!

பூஜை முடியும் நேரம் நெருங்குகிறது.

தலை வணங்கப் பிரியம் கொண்டவர்கள் அவரவர் நெஞ்சைத் தொட்டுப் பாாத்துக் கொண்டே 'அவனை'த் தரிசியுங்கள்.

காலதாமதம் செய்யக் கூடாது.

ஏன் தெரியுமா?

ஆலயங்களுக்கும் எட்டு மணி நேர வேலைதான்!

தெய்வத்தின் திருச்சக்கிதியில் எள் போட்டால் எள் விழ இடம் இல்லை; அவ்வளவு கூட்டம் கூட்டம் என்றால், சாமானியமான கூட்டமா?-பக்தர்களின் கூட்டம் அல்லவா?

சுந்தரேசன் விபூதிப் பிரசாதத் தட்டை நாகரிக மாகக் கையிலேக்திய வண்ணம், மண்டிய முகத்தை நேர்வசமாக நிமிர்த்தியவனாக, படிக்கட்டுகளைக் கடந்து இறங்கின்ை.

பளிச்சென்று தெரியும் வறுமையைப் போல, கறுப்புச் சுருட்டை முடிகள் பளிச்சிட்டன.தெய்வத்தின் புதிர்ப் புன்னகையை கித்தம் கித்தம் பார்த்துப் பழகிய தோஷம் காரணமாக, அவனும் ஒரு பூடகமான புன் முறுவலோடு பக்தர்களின் தருக்கூட்டத்தைத் தன்னு, ட்ைய அழகு விழிகளால் அளங்தான். ‘பெண்கள் பகுதி: