பக்கம்:சமுதாயம் ஒரு சைனாபஜார்.pdf/91

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

89


கன்னிப் பெண்ணின் புனிதமான அழகை ரசிக்கும் துரிய கலைஞன், அந்த ரசிகத் தன்மையை தன் கண் களின் வாயிலாக வெளிப்படுத்துகிருன். மெளனமான அக்த வெளியிட்டுக் குறிப்பை குமரிப்பெண் அங்கீகரிக் கிருள். அப்போது கலைஞன் எத்துணே மகிழ்வு அடைவான்?..

அப்படி இருந்தது வீரபாகுவின் மனநிலை கலைஞ னின் அமைதி அவருள் விளைந்தது. பங்கஜத்தின் அழகை மனக் கண்ணுல் பார்த்துப் பார்த்து ரசித்த அந்த மகத்தான வேளைகளை அவரால் எப்படி மறந்து விட முடியும்?

அப்போது, ‘ஸார், அதோ, மேலண்டைச் சுவரில் தொங்கதே முருகன் படம், அது ரொம்பப் பிரமாத மாக இருக்குதே?’ என்றாள் பங்கஜம்.

வீரபாகு சோபாவில் சாய்ந்தபடியே அவள் சுட்டிய ஆறுமுகன் படத்தை இனம் கண்டார்.

‘தம்புச் செட்டித் தெருவிலே முருகன் கோயில் ஒன்று இருக்கு து, அக்தக் கோயில் குருக்கள் பரிசாக எனக்குக் கொடுத்த படம் இது’ என்றார் அவர்.

பரிமளத்தின் காதுகளில் உரையாடல் செய்தி விழுந்தது.

‘ஓ’ குருக்கள் ரொம்ப ரொம்பப் பெரிய மனித ஏாகத்தான் இருக்கனும்னு தோணுது” என்றாள் பங்கஜம்.

ஏனே பரிதாபமாக விழித்தார், மங்களத்தைக் கொண்டவர்.

‘என்ன சொல்றிங்க, பங்கஜம்:

கடவுளையே உங்களுக்கு ப்ரசண்ட் செஞ்சவர் அபூர்வ மனிதராக இருக்கணும்னு சொன்னேன்!”

“ஓஹோ!’ கை கொட்டிச் சிரித்தார் வீரபாகு. பரிமளமும் மங்களமும் அடுத்தடுத்து ஒரே ஆசனத்தில்