பக்கம்:சமுதாயம் ஒரு சைனாபஜார்.pdf/92

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



அமர்ந்திருந்ததைக் கண்டு ஆனந்தக் கடலாடியது அவர் கெஞ்சம் ஆண்ட வனே எங்களுடைய பிள்ளைக் கலி தீர, பரிமளத்தை எங்கள் மகளாக ஆக்கிட்டே!... இனி, பரிமளத்தின் கல்கான விஷயம் முடிஞ்சாகனும் என்று எண்ணமிட்டார்.

மறுபடியும் முருகன் படம் அவர் கண்களில் பட்டது. ஒ!...புண்ணியகோடி குருக்கள் மத்தியானம் வரதாகச் சொன்னுரே? ஏன் வரவே இல்லை? என்று குழம்பினுர், சி று க ைத மன்னன் அதிவீரராம பாண்டியன் வருவதாகத் தெரிவித்த செய்தியும் அவருள் கினேவுக் குறிப்பானது, மனநிலைக்கு ஒரு மாற்றம் அருள்வதில் காட்டம் கொண்டவர் அவர். ஒதுங்கிக் கிடந்த மேலை நாட்டுச் சஞ்சிகையை ஒதுக்கி விடாமல் எடுத்தார். மேலே நாட்டுக் காதலர்கள் உதடோடு உதடு சேர்த்து, கெஞ்சோடு நெஞ்சு சேர்த்து ஆரத் தழுவி முத்தமிட்டுக் கொண்டிருக்த காட்சி மேலட்டை யில் தரிசனம் தந்தது. இன்பக் கிளு கிளுப்பில்ை, எதிர்பாராத சலனம் அடைந்த முகத்தோடு அவர் இடம் பெயர்ந்து எழுந்தார்.

தொலை பேசி கூப்பாடு போட்டது.

ஒட்டிச் சென்றார் அவர் ஆல்ை தொலைபேசித் தொடர்பு துண்டிக்கப்பட்டு விட்ட்து. இப்படி இதற்கு முன் பலமுறை கிகழ்ந்த விவரங்களையும் கினைவு கூர்ந்தார் வீரபாகு.

இருமல் அடங்கியது. அத்தான் உ ங் க போட்டோ ஏதோ பேப்பரிலே வந்திருக்குதுங்களே?... பாரோ கிழிச்சி வீசியிருக்காங்க!...அடடே’ என்று சொல்லி, மங்களம் அந்தக் கடுதாசிக் கிழிசலில் தெரிந்த புகைப்படத்தை-தன் கணவரின் புகைப் பட த்தை தன் கணவரிடமே கீட்டினுள்.

வீரபாகு அந்த கிழற் படத்தைப் பார்க்க முனைந்த நேரத்தில், “அம்மா , என் படம் கூட பப்ளிஷ் ஆகி யிருக்கே வெறும் கிழில் மட்டும்தான் கிடக்குதுங்க அம்மா!’ என்று தெரிவித்தாள் குமாரி பரிமளம்.