பக்கம்:சமுதாயம் ஒரு சைனாபஜார்.pdf/94

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92


‘வாங்க.” என்றார்; வரவேற்புப் பண்பு அந்தத் தொனியில் மிதந்தது. உட்காருங்க!...” என்று அடுத்துச் சொன்னர் அவர். ‘அநேகமாக இவன் அதிவீரராமபாண்டியனுகத்தான் இருக்க வேணும். முக்கால்வாசி என்ைேட ஊகம் சரியாகவே இருக்க வாம்’ என்ற கணிப்பு அவருள் உள் வட்டமாகச் சுற்றிக் கொண்டிருந்தது

பெருந்தன்மையைப் பார்வையில் அ ைம த் து, ஆனவப் புன்சிரிப்பை உதட்டுக் கரையில் இழைத்து கம்பீரமான ஒயிலுடன் நின்ற அவனுக்கேன்று காத்துத் தவம் கிடந்த மாதிரி, வெறிச்சோடிக் கிடந்த கூடை நாற்காலியில் அமர்ந்தான், ஏ. வி. பாண்டியன். லைேலியம் விரிப்பில் துாசு ஏது? என்றாலும் அவன் உடுத்துக் கொண்டிருந்த வேஷ்டியின் கான்கு அங்குலச் சரிகைக் கரையும் அந்தப் பூவிரிப்பில் தான் இழைக்திருந்தது. -

அவன் கண்கள் சுற்றிச் சூழ நோக்கின. ஒt... பரிமளம்.!...” என்று அவனுக்குச் சொந்தமான உள் மனம் தனக்குத் தானே சொல்லிக் கொண்டது. லேசாக ஒருமுறை கனைத்துக் கொண்டான் அவன். கதை எழுதும் கற்பளுவாதி அல்லவா? அவன் எண்ணியது கடந்தது. எதிர்பார்த்தது வீண்போகவில்லை.

மங்களத்திடம் தன்னுடைய படம் வெளியாகி யிருந்த அந்தக் காகிதத் துண்டைக் காட்டிக் கொண் டிருக்த குமாரி பரிமளம், பொட்டில் தட்டுப்பட்ட மாதிரி அதிர்ச்சி அடைந்து ஏறிட்டுப் பார்த்தாள். கோல விழி களிலே கோலமிட்டது வியப்பு. சிமிழ் உதடுகளிலே உமிழ்ந்து கின்றது, பரிசுத்தமான புன் முறுவல். சிந்துாரக் கன்னங்களிலே ஒடிப் பிடித்து விளையாடியது G

ஓ!...மிஸ்டர் பாண்டியன்! என்ளுேட பாண்டியன்!’ கினைவுகள் சொக்கட்டான் ஆடின்.

இப்பத்தான் வந்தீங்களா, மிஸ்டர் பாண்டியன்’

என்று புள்ளிமானகத் துள்ளிக் குதித்த வண்ணம்