பக்கம்:சமுதாயம் ஒரு சைனாபஜார்.pdf/95

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

93


அதிவீரராமபாண்டியன் வீற்றிருந்த ஆசனத்தை. நெருங்கினுள் பரிமளம்.

“எஸ். ஜஸ்ட்...இப்பத்தான் வந்தேன்’ என்றான் சிறுகதை மன்னன்.

 *   

பரிமளத்தையும், பாண்டியனையும் ஒரே பார்வை யால் அளந்த வீரபாகு, எங்கேயிருந்து வர்றிங்க’ என்று விசாரிக்கலானர்.

“கீழ்ப்பாக்கத்திலிருந்து!” என்று பதில் மொழிக் தான பானடியன.

‘கீழ்ப்பாக்கத்திலிருந்தா?”

‘ஏன் அப்படிக் கேட்கறிங்க? இடம் மாறி வந்திடல் லேங்க நான்:

வீரபாகுவுக்குத்தான் அப்படிக் கடகடவென்று சிரிக்கத் தெரியும். ‘நானும் இடம் மாற்றி இருக்கல் லேன்னு கினைக்கிறேன்!” என்றார்,

இப்போது அதிவீரராமபாண்டியனின் முத்துப் பற்கள் அழகுச் சிரிப்பைச் சுடர் தெறித்துக் காட்டின. “கீழ்ப்பாக்கம்னு சொன்னதும் இவங்க ரெண்டு பேருக்கும் மத்தியிலே ட | வ ம், பைத்தியக்கார ஆஸ்பத்திரி மறைமுகமான தமாஷ் ஆகித் திண் டாடுது!’-இவ்வாறு ஒரு சிந்தனை ஊடாடியதும், பரிமளமும் லேசாக முறுவல் காட்டினுள்.

இக் காட்சியை, கண்காட்சியில் வேடிக்கை பார்ப்ப தற்கு ஒப்பாகப் பார்த்துக் கொண்டேயிருந்தார்கள் பங்களுர் பங்கஜமும், மங்களமும்!

“என் பெயர் அதிவீரராமபாண்டியன்!”

நான் வீரபாகு!”

  • வணக்கங்க;’