பக்கம்:சமுதாய இலக்கியம்.pdf/101

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பணமும், KIRT SAKாரும் ஆடவன் எவ்வளவுதான் அழகுடையவகை இருந் தாலும், அவனிடம் செல்வ வளம் இல்லாவிட்டால், பாவை யர்கள் அவனை ஏறெடுத்தும் பார்க்க மாட்டார்களாம், பணமில்லாதவன் ஒருவன் தன் காதற் பாவையைத் தேடிச் சென்றாலும் அவள் அவனை வரவேற்க மாட் டாளாம். -பேரழகில் சீவ்கனே ஆனாலும், நீ சேர்ந்திராய் ஆகில், ஒரு பாவையர் ஆனாலும் முகம் பார்ப்பாரோ?--வாவா, உன் வீட்டிலே நான்வரத்தான் வேளை கிடையாதோ? சீ .' மாட்டியே பேசு! என்றாலும் வாய் திறவாள்!... அவள் அவனோடு பேசவும் மறுத்துவிடுவாள். ஏன் இப்படிச் செய்கிறாய் என்று அவன் வருந்திக் கேட்டால், அவள் தாக்கு ஏதேதோ வந்து உடம்பைக் கெடுப்பதாகச் சொல்வாளாம், எப்படி? கேட்டால் ஒருத்தலை நோவாம்; உடம்பு சுரத்தால் வருத்தமாம், காதில் வலியாம்!-பொருத்து எல்லாம் கட்டுவிட்டு, கால்கை கடுக்குதாம்! சந்தியில் பேய் : தொட்டுவிட்டதாலே துவளை யாம்! ~~ விட்டுவிட்டுக் காயுதாம்! அத்தோடே கண் நேக்காடாம்! வயிற்றில் வாயுவாம்! நீர்ப்பாடு வந்ததாம்!- தாயார்க்குப் பித்தமாம்! வாந்தி பிராந்தியாம்! ஆயாசம் ,


---

ஒருத்தலை : தலையின் ஒரு புறம்; பொருத்து : சரீரப் பொருத்துக்கள்; துவளை : சோர்வு.