பக்கம்:சமுதாய இலக்கியம்.pdf/117

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

415 மாகக் காட்டலாம், எட்டாம் நூற்றாண்டினளவில் தோன்றிய திவாகரம் என்னு* நிகண்டு நூலும் *நடமே கதாடகம்” என்று அழுத்தமாகப் பொருள் கூறுகின்றது .ஒன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்த மாணிக்க வாசகர் “நாடகத்தால் உன்னடியார் போல் நடித்து” என்று கூறுவதையும் சிலர் நாடகம் அக்காலத்திருந்த "தற்கு ஒரு சான்றாகக் காட்டுவதை நாம் கண்டிருக்கிறோம்" ஆனால் அதே மாணிக்கவாசகர் "பதஞ்சலிக் கருளிய பரம நாடகம்” (கீர்த்தித் திரு அகவல்) என்று கூறும்போது நாட்டி உத்தைத்தான் குறிப்பிடுகிறார் என்பதை நாம் எளிதில் கண்டுணரலாம். எனவே அந்தக் காலத்தில் நாடகம் என்று கூறப்பட்டதெல்லாம் நாட்டியத்தைக் குறித்துத்தான், இசையும் அபிநயமும் கலந்த, கூத்தையே அவர்கள் அவ்வாறு குறிப்பிட்டு வந்திருக்கிறார்கள். 'கூத்தாட்டு அவைக்களம்' என்று வள்ளுவர் குறிப்பிடுவதும், இத்தகைய நாட்டியக் கூத்துக்கள் நடைபெற்ற இடமாகத் தான் இருத்தல் வேண்டும். . .' இத்தகைய கூத்துக்களை நாம் சங்க இலக்கியத்தில் பரக்கக் காணலாம். இந்தக் கூத்துக்களில் பங்கு பெற்ற மகளிர், : 'நாடக மகளிர்' என்றும், 'ஆடுகள மகளிர் என்றும் குறிப்பிடப் பட்டார்கள். இவர்கள் கொடித்தேர் வேந்தர் முன்னிலையிலும், குறு நில மன்னர் முன்னிலையிலும் ஆடிப் பரிசில்கள் பெற்றார்கள். இந்தக் கூத்துக்கள் நாளடை வில் வளர்ந்து பரிணமித்து, பல்வேறு மாற்றங்களையும் நுட்பங்களையும் செம்மையையும் அடைந்து வந்திருக்க வேண்டும். சிலப்பதிகாரத்திலே இவற்றைப் பற்றிய பல்வேறு விவரங்களை நாம் காண்கிறோம். இத்தகைய நாட்டியங்களில் பங்கு பெற்ற நாடக மகளிர் அரசன் முன்பு தமது நாட்டியத் திறனைக் காட்டி, “தலைக்கோலி' என்ற பட்டமும் பெற்றனர். மாதவி இத்தகைய தலைக்கோல் பட்டத்தைப் பெற்றவள். இத்தகைய பட்டங்கள் வழங்கியதற்கு ஆதாரமாகக் கல்வெட்டுச் சான்றுகளும் உள்ளன. "