பக்கம்:சமுதாய இலக்கியம்.pdf/120

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

128 களாக நடிக்கப் பெற்றன; பெரும்பாலானவை கதா கால கோபத்துக்கே பயன்பட்டு வந்தன. எனவே மேடை நாடக வளர்ச்சி என்பது சென்ற (S; ற்றாண்டில் தான் தமிழ் நாட்டில் மும்முரமாகத் தொடங்கித்து. பத்தொன்பதாம் நூற்றாண்டில் தான் மேடையில் நடிக்கப் பெறுவதற்கென்றே பல நாடகங்கள் எழுந்தன. இந்த', நாடகங்கள் அதற்கு முந்திய நூற்றாண்டுகளில் தோன்றிய கீர்த்தனை நாடகங்களைப் 1.3யன்படுத்திக் கொண்டன; அத்துடன் நாடகத்தில் வசன மும் இடம் பெறலாயிற்று. மேலும் சென்ற நூற்றாண் உடல் நிலவிய சூழ் நிலைகளின் காரணமாக, தமிழ் நாடகத் துறையில் புதிய கதாம்சங்களும், புதிய நாடக உருவங் கிகளும், புதி:14 ' பரிசோதனைகளும் இடம் பெற்றன. அத் தகைய - புதிய பரிசோதனையில் ஒன்று தான் உடம்பாச்சாரி விலாசம்'. பத்தொன்பதாம் நூற்றாண்டில் தோன்றிய. இந்த நாடகத்துக்குத் தமிழ் நாடக வரலாற்றிலே ஒரு தனி இடம் உண்டு. 23.கத்தொன்பதாம் நூற்றாண்டில் ஆங்கிலேயர்கள் - தமிழகம் எங்கணும் கால்பரப்பி வேரூன்றிக் கட்டியாகத் தொடங்கி விட்டார்கள். அவர்களின் ஆதிக்கத்தினால் நாம் அனுபவித்த அல்லல்களும் அடிமை வாழ்வும் நாம் மறப்பதற் குரியன அல்ல தான். என்றாலும் அக்காலத்தில் நமக்குக் கிட்டிய கலாசார ஆதாயங்களையும் நாம் மறந்து விட முடியாது. அவர் தம் ஆட்சியினால் உலகத்தின் தலைசிறந்த மொழிகளில் ஒன்றாக விளங்கும் ஆங்கிலத்தோடு நாம்',