பக்கம்:சமுதாய இலக்கியம்.pdf/139

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

137. , டம்பாச்சாரியின் : தர்பார் இப்படித் தான் தொடங்கு. கிறது. தனது வேலைக்காரனான சட்டுவாஜி அளிக்கும் விதேலான பதில்களைக் கண்டு, அவன் அகமகிழ்ந்து போகிறான். எது எப்படியிருந்தபோதிலும், ஆடம்பரம், பகட்டு, வெளிவேஷம் முதலியவை 19ட்டும் ஒழுங்காக இருந்தால் போதும்' என்று எண்ணுகிறான் அவன்: இதனை. நாம் முதற்காட்சியின் இறுதியில் அவன் " தனது தவசிப் பிள்ளை (சமையற்காரன்) நமசிவாயன் : என்பவனுக்குச் சொல்கிற .. புத்திமதியிலே நன்கு கண்டுகொள்ளலாம். தன் வீட்டுக்குப் புதிதாக , வேலைக்கு வந்துள்ள, தவசிப் பிள்ளையிடம் இரவு தனது நண்பர்கள் வரும் தாக்வும், அவர்களுக்கு மாமிச உணவு தயாரிக்க வேண்டும் எனவும் கூறுகிறான். அந்தத் 'தவசிப் பிள்ளையோர பஞ்சத்துக்குத் , தவசிப்பிள்ளையானவன்; வெளியில் சைவம்; என்று சொல் லிக் கொள்பவன்; ஆனால் அந்தரங்கத்தில் மீனும் முட்டையும் சாப்பிடுபவன். அவன் தன் பூர்வோத்தரத்தையெல்லரம் டம்பனிடம் மறைக்காது வெளியிட்டு, சமையலைச் செய்து முடிப்பதாகக் கூறுகிறான். அதைக் கேட்டதும் டம்பகன் ' அவனும் தனக்கேற்ற வேலைக்காரன் என்றே மதிக்கிறான். . மதித்து அவனிடம் பின்வருமாறு , உபதேசிக்கிறான்: '- நீ சீக்கிரத்தில் நாம் சொன்னபடி சமைக்கிற அலுவலைப் பார், நம்முடைய சிநேகர் வந்திருக்கும்போதும் வட்டிக்கும் போதும் பால் மாறாமல், குழையல் மாத்திரம் வெகு திட்டமாய்ப் போட்டுக் கொண்டிரு. ஏனென்றால் ஒருவன் எந்த மட்டும் எவ்வளவு தளமாய் விபூதி பூசுகிறானே அவ்வளவு பெரிய சைவன் என்று எண்ணப்படுவான்.., சாதி குலம் என்பது நித்தியமில்லை.” - இவ்வாறாக, டம்பாச்சாரியின் திருக்கொலுவுக்குக் குடிகேடன், ஜகஜ்ஜாலம் புரட்டன், ஆயிரப் புளூகன், தலைப்பாகை மாற்றி, . இன்ஸால் வெண்ட் மாஸ்டர்,