பக்கம்:சமுதாய இலக்கியம்.pdf/143

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ளுக்குப் பொங்கலிட்டுப் பூஜை செய்யப்போன பெண்கள் பேரில் பதங்களும், பாட்டுக்களும், புலகைத் தொட்டி பற்றியெரிந்த ' பதங்களும், காஞ்சிபுரம் - பச்சையப்ப முதலியார், கோ. சீனிவாசப் பிள்ளை, ஜட்ஜ் நார்ட்டன் துரை இவர்கள் பேரில் அநேக அலங்கார வினோதப் பாட்டுக் களும் பதங்களும், சிந்துகளும், பாதிரிக் கும்மிகளும், கிறிஸ்து மதக் கண்டனக் கலம்பகமும், இன்னும் அநேக தனிப்பாட்டுக் களும் பாடியிருக்கிறோம். கவிராயர் எப்படிப்பட்டவர் என்பதற்கு இதற்கு மேல் விளக்கம் தேவையில்லை. உதவாக்கரைப் பாடல்களை எழுதிவந்த மண்ணடிக் கவிராயர்கள் பரம்பரை'யில் வந்தவர் தான் இவரும் என நாம் இனம் கண்டு கொள் கிறோம். ஆனால் இந்தக் கவிராயரும் டம்பனிடமிருந்து சும்மா போகவில்லை, போதுமான சன்மானமும் ஒரு சால்வையும் பெற்றுத்தான் போகிறார்! அன்று நEைழிக் காஞ்சியால் கவிராயர் வந்து சென்ற பின்னர் டம்பனின் சித்தப் பாவான பரமலோபன் வருகிறார். எப்படி? கொடை உழனுபவமில்லாமல் குழியிலே பணம் புதைத்தும், கடையிலே கழித்த சொத்தைக் கத்திரிக் காயும் வாங்கி, அடை அப்பம் கட்டுத் தின்று, ஆறு மாசத் தழுக்கு உடைதரித் துலாவுகின்ற உலோபனும் இதோ வந்தானோ! பரமலோடன் வந்ததும் சட்டுவாஜி தா ஓர் எஜமான ருக்கு நல்ல வார்த்தை சொல்லி, அவரைத் திருத்தும்படி லோபனிடம் வேண்டிக்கொள்கிறான். அவரும் அதற் காகத்தான் தாம் வந்ததாகக் கூறி டம்மனிடம் செல் கிறார். டம்பன் அவரது வருகையால் மகிழ்ச்சியடைய வில்லை யெனினும், அவரை வரவேற்று ஆசனமளித்துக்