பக்கம்:சமுதாய இலக்கியம்.pdf/175

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பற்றி நான் சுருக்கமாக ஒரு.. பாராவில் 'A, றிவிட்டேன். அவற்றில் அடங்கியுள்ள நரக வேதனையையும், கோரக் கொடுமையையும் நானும் வருணிக்க முடியாது, நீயும் உணர முடியாது. உண்மையில் நீ அதை உணராமலிருப்பதே நல்லது என்று நினைக்கிறேன். ஏனெனில் அவ்வுணர்ச்சியினால் உனக்கு ஆங்கிலேயர்களின்மீது ஆருத சினமும் தீராத பகையும் மூள்வது நிச்சயம். உனது கன்னி இதயத்தில் அத்தகைய நஞ்சு தோய்வதை நான் விரும்பவில்லை .." இவ்வாறு நேர்ந்த பஞ்சங்கள் இந்திய நாட்டின் பல் வேறு பகுதிகளையும் பாதித்தன. வடநாடும் தென்னாடும் பாதிக்கப்பட்டன. பத்தொன்பதாம் நுாற்றாண்டின் பிற் பகுதியில் விளைந்த பஞ்சங்களால், இரண்டு கோடி மக்கள் பட்டினிச் சாவுக்கு ஆளானார்கள் என்று .. ஆங்கிலேயரின் அதிகாரபூர்வமான கணிப்பே கூறுகிறது. இதனைப்பற்றி இந்திய நாட்டின் பிரபவ சரித்திராசிரியரும், “மகாராஷ்டி ஜீவன் உதயம்', 'ரஜபுத்திர ஆதிக்கத்தின் அஸ்தமனம்! முதலிய சரித்திர நாவல்களின் ஆசிரியருமான ', ரமேஷ் சந்திர தத்தர் என்பவர் கசப்புணர்ச்சியோடு பின்வருமாறு எழுதியுள்ளார்: 'விக்டோரியா மகாராணி ஆட்சிபீடத்தில் ஏ றிய ஆண்டிலே (1837) வட இந்தியாவில் பெரும் பஞ்சம்; அந்தப் பஞ்சத்தில் பத்து லட்சம் பேர் பலியானார்கள். சிப்பாய்க் கலகம் (1857ல் நடந்த இந்திய சுதந்திர யுத்தம்) நிகழ்ந்ததைத் தொடர்ந்து, இருபதாம் நூற்றாண்டுக் காலத்தில் மூன்று பெரும் பஞ்சங்கள். இவற்றினால் பீகார், ஓரிசா, வடமேற்கு மாகாணங்கள் பாதிக்கப்பட்டன, விக்டோரியா மகாராணி இந்தியாவின் சக்கர வர்த்தினியாகத் தன்னைப் பிரகடனப்படுத்திக் கொண்ட ஆண்டிலேர் (1877) சென்னை மாகாணத்தில் மாபெரும் பஞ்சம்; அந்தப் பஞ்சத்திலே தென்னிந்தியாவில் ஐம்பது லட்சம் மக்கள் ஆவி து ஐந்தார்கள். மகாராணியின் வைர விழா வி ன்