பக்கம்:சமுதாய இலக்கியம்.pdf/212

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

21) தனயான கண்டனக் குரலும் அழகிய சொக்கநாதரிடம் சிறிதும் இல்லை என்றே சொல்லவேண்டும். மேலும் வில்லி யப்பரோ பஞ்சம் என்ற சோக நாடகத்தின் திரைமறைவிலே நடக்கு: தில்லுமுல்லுகளையும் திருட்டுத்தனங்களையும் நகைச்சுவை ததும்ப அம்பலப்படுத்தி, துன்பத்திலும் வாழ்க் கையைச் சிரித்துக்கொண்டே. ஏற்கக்கூடிய ஒரு மனத் தெம்பை ஊட்டும் விதத்தில் தமது நூலை ஆக்கியுள்ளார். பஞ்சத்தின் கொடுமையினால் அம்பலமான மனித வர்க்கத்தின் சகலவிதமான போலித் தனங்களையும் கண்டு, அவர் எள்ளி நகையாடிக் கை கொட்டிச் சிரிக்கிறார்; நம்மையும் சிரிக்க வைக்கிறார். அவரது சிரிப்பு நையாண்டிச் சிரிப்பு; அங்கதச் சிரிப்பு. ஆனால் காந்திமதி அந்தாதியை இயற்றிய அழகிய சொக்கநாதரோ பஞ்சத்தின் கொடுமை தாங்க மாட்டாமல் அழுதார்! ஆம், காந்திமதி அந்தாதி ஓர் ஒப்பாரிதான் எனவே இவ்விரு நூல்களும் ஒரே விஷயத்தைக் கருப்பொருளாகக் கொண்டுள்ள ஒன்றே பிரதானமான ஒற்றுமை என்பதைத் தவிர, பஞ்ச லட்சணத்தின் சிறப்போடு, காந்திமதி அந்தா தியை ஒப்பிட்டுப் பார்க்கவே இடமில்லை, ஏனெனில் இவ்விரு -நூல்களிலும் பஞ்சலட்சணத்துக்குத் தமிழ் இலக்கிய உலகில் ஒரு தனியான, சிறப்பான இடம் உண்டு. தமிழ் இலக்கியத் திலேயே இன்று வரையிலும் பஞ்சலட்சணத்துக்கு ஈடு ஜோடான எந்தவொரு நையாண்டி (அங்கத) இலக்கியமும் தோன்றியதில்லை என்றே சொல்லலாம். சேK கத்திலே சிரிப்பார் பாஞ்சலட்சணத்திலுள்ள பிரதானமான உ ண ர் ச் சி நகைச்சுவைதான். பஞ்சம் என்பதோ துன்ப மயமான சூழ் நிலையைப் பிரதிபலிப்பதாகும். எனவே பஞ்சத்தை நூற் பொருளாகக் கொண்ட துன்ப மயமான கதாம்சத்தில் நகைச் சுவையைப் பேரளவுக்குக் கையாள்வது சரிதானா என்று சிலர் நினைக்கலாம். ஆனால் அப்படிக் கையாள்வதும் இலக்கியத்தில் ஒரு முக்கியப் பிரிவுதான். குறிப்பாகச் சொன்னால் அத்தகைய