பக்கம்:சமுதாய இலக்கியம்.pdf/217

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

215 தெரியவநாலவே, உடுத்தியதி மனை மரியாதைகளோடு அடக்கம் செய்யப்பட்டாரெனவும், தெரியவந்தது. மேலும் எல்லாக் கவிஞர்களைப்பற்றியும் சொல் 63து போலவே, அவரது வித்வாம்சத் திறமையைத் தெய்வமே வந்து வெளிப்படுத்தியதாக, அதாவது என்றே ஒருநாள் அம்மன் இரவிலே வந்து அடியெடுத்துக் கொடுக்க, அவர் தமது பிரபந்தத்தைப் பாடி முடித்ததால் அவரது வம்சத்தினர் பெருமைப்பட்டுக் கொள்கிறார்கள்! 'குட்டிப் "பாட்டு' என்ற சிறு நூலொன்றையும் அவர் எழுதியதாக அவரது குடும்பத்தார் கூறுகிறார்கள். ஆனால் அந்தால் எவருக் கும் கிட்டவில்லை. இவற்றைத் தவிர, பஞ்சலட்சணத்தின் முகப்பில் காணப் படும் சிறப்புப்பாயிரம், சாற்றுக் கவிகள், மற்றும் நூலில் காணும் குறிப்புக்கள் முதலியவற்றின் மூலம் மேலும் சில. விவரங்களை நாம் பெற முடிகின்றது. பிரமனூர் மீனாட்சி சுந்தரத் தேவர் இயற்றிய சாற்றுக்கவியின் மூலம் வில்லியப்ப பிள்ளை பிரமனூர் அய்யம்பெருமாள் பிள்ளையின் குமாரர் (வருமுகப் பாசியன் அய்யம்பெருமாட்கோர் நாமகளாய் வந்தே...) என. அறிகிறோம். இந் நூலுக்குச் 'சதாவதானி சரவணப் பெருமாட் கவிராயர், சிலேடைப்புலி பிச்சுவய்யா முதலிய பெருமக்களும் சாற்றுக் கவிகள் அளித்துள்ளனர். மேலும் நூலாசிரியர் வியாபார மோசடிகளைப் பற்றிக் குறிப்பிடும்போது, முத்துக்கிருஷ்ண துரை, அருணாசலம், அய்யம்பெருமாள், வெண் ணிமலை, காத்தையா என்னும் சிலரையும், தட்டார்களைப்பற்றிய விவரத்தில் துரைக்கணபதி ஆசாரி, ஆறுமுகம், ராமசாமி ஆசாரி என்னும் சிலரையும் நம்பிக்கை மோசம் செய்யாத நாணயஸ்தர்கள் எனக் குறிப்பிடுகின்றார். எனவே இவர்களெல்லாம் வில்லியம் பருக்குத் தெரிந்தவர்களாகவோ, வேண்டியவர்களாகவோ இருக்கக்கூடும் என நாம் ஊகிக்கலாம்,