பக்கம்:சமுதாய இலக்கியம்.pdf/219

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

217 கேற்றியதுதான் உண்மை; அதுவே சாத்தியமானதும் கூட. காரணம் தாது வருஷப் பஞ்சம் தமிழ் நாட்டைப் பன்னிரண்டு ஆண்டுகளுக்கும் மேலாகவே வாட்டி வத்திருக் கிறது. உதாரணமாக, முந்திய கட்டுரையில் குறிப்பிட்ட “காந்திமதி அந்தாதி' என்ற நூலில், புரிசுத்த காந்திமதி அம்மையே! இந்தப் பன்னிரண்டு வருசத்துப் பஞ்சத்தை நீக்கி அன்பாய் எம்மை வாழ்விப்பையே! என்ற அடிகள் காணப்படுகின்றன. எனவே இத்தகைய தொரு நெடிய கொடிய பஞ்சத்தின் மரணவாயில் சிக்கித் தவித்த மக்கள் அதிலிருந்து தப்பிப் பிழைத்து, மீண்டும் புது வாழ்வு தொடங்குகின்ற ஒரு சந்தர்ப்பத்தில் தான் வில்லியப்ப பிள்ளையின் பஞ்சலட்சணம் உருவாகியிருக்க முடியும். நாலில் காணப்படும் நையாண்டியும் நகைச் சுவையும் அத்தகையதொரு சூழ்நிலையில் தான் பிறப்பெடுக் கவும், பிறர் ரசிக்கத் தக்தாக அமையவும் முடியும்' எனவே 1876-ம் ஆண்டில் தொடங்கிய பஞ்ச த்தைத் தாது நூற்பொருளாக் கொண்டு, அதனை அப்போதே எழுதாமல், அதற்குப் பின் பல ஆண்டுகள் கழித்து எழுதத் தொடங்கி, 1899-ம் ஆண்டில் பூர்த்தி செய்து அரங்கேற்றினார் வில்லியப்ப பிள்ளை என்று கொள்வதே பொருத்தமும் உண்மையும் ஆகும். சரித்திரத்தைப் பிரதி பலிக்கும் இலக்கியங்கள் பலவும் அந்தந்தச் சரித்திர காலத்திலேயே தான் உருவாக்கப்படுகின்றன என்று சொல்ல (பூரடியுமா?