பக்கம்:சமுதாய இலக்கியம்.pdf/220

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

218 திருகாத விலாசம் ' பெயரை லட்சணத்து வில்லியப்ப பிள்ளையின் பஞ்ச லட்சணம் தமிழ் இலக் கியத்திலேயே , ஒரு புதுமையான நூல் என்று துணிந்து சொல்லலாம். அவர் தம் நூலுக்குப் 'பஞ்சலட்சணத் திரு முக விலாசம்' என்ற நீளமான பெயரைச் சூட்டியுள்ளார். திருமுக விலாசம் என்பது உலா, தூது, மடல் போன்ற பிரபந்த வகையோடு ஒட்டியது தான். தூதுப் பிரபந்தத்தில் புல்வன் எப்படி தான் தூதுவிடும் விறலியிடமோ, பறவை யிடமோ, வேறு பொருளிடமோ தனது வரலாற்றைக் கூறித் தூது விடுக்கிறானோ, அதுபோன்று திருமுக விலாசம் என்ற இந்தப் பிரபந்தம் பஞ்சத்தால் வாடும் மக்கள் சோம், சுந்தரக் கடவுளிடம் தமது குறையை முறையிட்டு, அவரிட மிருந்து சிவகங்கை ஜமீன்தாருக்கு ஒரு சிபாரிசுக் கடிதம் வாங்கி வந்து கொடுப்பதாகப் பாடுகிறது. கடிதத்தை வாங்கி வந்து கொடுக்கும் மரபைப் பிரதிபலிப்பதால் இதற்குத் திருமுக விலாசம் எனப் பெ ர் வைக்கப் பெற் துள்ளது. செய்யுள் துறைகள் பலவற்றையும் பற்றி வகை பிரித்துக் கூறும் 'நவநீதப் பாட்டியல்' என்னும் இலக்கண் தூவில் ஏனைய பிரபந்த வகைகளைப் பற்றிய குறிப்புக் களெல்லாம் காணப்படுகின்றன. எனினும் அதில் திருமுக விலாசம் என்ற பிரபந்தத் துறையைப் பற்றிய பேச்சே இல்லை. எனவே பிரபந்த வகையில் திருமுக விலாசம் புதிய படைப்பு என்று தான் சொல்ல வேண்டும். இந்தப் படைப்பு எப்படிப் பிறந்திருக்கக் கூடும்? பழம் பாடல் களொன் றில் திருவாலவாயுடையாரே பாண பத்திரருக் குப் பொருளுதவி செய்யும்படி சேரமான் பெருமாள் நாய னாருக்கு எழுதிய திருமுகப் பாசுரம் என்ற பெயரில் ஒரு சிறிய அகவற்பா காணக் கிடைக்கின்றது. சிவபெருமானே சிபாரிசுக் கடிதம் எழுதிக் கொடுத்ததாகக் காணப்படும் இந்தப் பாடலிலிருந்து புலவர்கள் தமது கற்பனையை