பக்கம்:சமுதாய இலக்கியம்.pdf/221

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விரிவு படுத்தி, அதன் மூலம் திருமுக விலாசம் எ ன் ற ஒரு பிரபந்தத் துறையைப் புதிதாக உரு வாக்கியிருக்கலாம் என்றே எனக்குத் தோன்றுகிறது. ப ஞ் ச ல ட் ச ண த் திருமுக . விலாசமும் சிவபெரு மானிடமிருந்து சிபாரிசுக் கடிதம் பெற்று வருவ தாகத்தானே அ ைம ந் து ள் ள து! ஆனால் இந்தப் 'திருமுக விலாசப் பிரபந்தங்கள் த மி ழி ல் ஏனைச் பிரபந்தங்களைப்போல் அதிகமாகத் தோன்றி விட வில்லை," வில்லியப்பருக்கு முன்னால், இ ன் ன ற க் கு ஏறத்தாழ நூற்றைம்பது ஆண்டுக் காலத்துக்கு முன்னர் ராமநாதபுரத்தை ஆண்டு வந்த முத்து ராமலிங்க சேதுபதியின் சமஸ்தான வித்வானாக. இருந்த அஷ்டாவதானம் சரவணப்பெருமாள் கவிராயர் 'விநாயகர் திருமுக விலாசம்” என்ற பெயரில் ஒரு நூலை இயற்றியுள்ளார் என்று தெரிகிறது. அந்த நூலும் இன்று தமக்குக் கிட்டவில்லை. எனவே அதன் அமைப்பு முறையைப் பற்றி நாம் எதுவும் தெரிவதற்கில்லை. எனவே நமக்குக் கிட்டி யுள்ள முதல் திருமுக விவாசப் பிரபந்தம் பஞ்சலட்சணம் தான், ஒருவேளை வில்லியப்ப பிள்ளை தாம் பாட எடுத்துக் கொண்ட பொருளிலும் புதுமையை நாடியது போலவே பிரபந்த முறையிலும் புதுமை நாடிய புலவராக, முன் னோடி.யாகக்கூட இருக்கலாம். வில்லியப்ப மீள்ளைக்கு முந்திய காலத்தில் தோன்றிய விநாயகர் திருமுக விலா சத்தைப் போலவே, அவருக்குப் பின்பும் ஒரு திருமுக விலாசம் தோன்றியுள்ளது. நாட்டுக் கோட்டை நகரத்தார் மரபைச் சேர்ந்த முத்தப்பச் செட்டியார் என்பவர் எழு நகரத்தார் பெயரால் ஒரு திரு மூசு விலாசம் பாடியுள்ளார். இந்த நூலைப் படித்துப் பார்க்கும் வாய்ப்பு எனக்குக் கிட் டியது மிகவும் சிறிய நூல். சிற்சில வரிகளைத் தவிர அதில் பாராட்டக்கூடியதாக ஒன்றும் இல்லை; சர்வ சாதாரண {மானது என்பதைத் தவிர அதைப் பற்றிக் குறிப்பிட்டுச் சொல்ல எதுவுமில்லை. எனவே வில்லியப்ப பிள்ளையின் திரு முக விலாசம்தான் திருமுக விலாசப் பிரபந்தத்துக்கே