பக்கம்:சமுதாய இலக்கியம்.pdf/23

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- 2 பாரதிதான், தலைவனாக விளங்குகிறான்; அவனுக்குப்பின் அந்தத் தலைமைப் பீடத்தைப் பெற்றுக் கொள்ளக் கூடி, தகுதி இன்னும் யாருக்குமே ஏற்பட்டு விடவில்லை.. எனவே இலக்கியத்தில் மரபையும், இலக்கணத்தையும் தமது கருத்துக்களுக்கும் தேவைகளுக்கும் ஏற்றவாறு, வளர்த்துப் புதிய உருவங்களையும், புதிய , மரபுகளை யும் "உண்டாக்குபவர்களும், புதிய சிந்தனைகளை, புதிய கருத் துக்களை, கால தேச வர்த்தமானத்துக் கேற்ற லட்சியங்களை, ஆசாபாசங்களை வெளியிட முயல்பவர்களும்தான் புதிய இலக் கியத்தைச் சிருஷ்டிக்க முடியும். மற்றவர்களெல்லாம் - ‘புதிதாகச் சொல்வதற்கு என்ன இருக்கிறது?” என்றே, “புதிதாக என்ன சொல்லி விட முடியும்?” என்றே கேட்டு, தமது கருத்துப் பஞ்சத்தையும், கையாலாகாத் தனத்தையும் தான் அம்பலமாக்கிக் கொள்ள முடியும். எனது நண்பர் என்னிடம் கேட்ட கேள்வி இத்தகையதுதான். என்றாலும் அவர் ஒன்றும் புதுமை இலக்கியத்துக்கோ , புதிய முயற்சி களுக்கோ , விரோதியல்லர். எனினும், அவர் - அந்தக் கேள்வியைக் கேட்டதன் நோக்கம் வேறு. புதிய விஷயங்களை எப்படிக் கவிப் 'பொருளாகக் காண்பது என்ற சிந்தனையின் காரணமாக எழும் நடைமுறைப் பிரசினையைப் பற்றித்தான் அவர் கேட்டார்; அவரது கேள்வியின் உள்ளர்த்தம் அதுதான். ' , ' அவருடைய கேள்விக்கு நான் “முடியும் என்று ஒரு. வார்த்தையில் பதிலளித்து விட்டு, 'எனது கருத்தைப் பின்வருமாறு விளக்கினேன் :. : நீங்கள் இயற்கைப் பொருள்களுக்கும் செயற்கைப் பொருள்களுக்கும் ஏதோ வித்தியாசம் காண்கிறீர்கள். அதாவது இயற்கைப் பொருள்களெல்லாம் , இயல்பாகவே கவிப் பொருளாக்குவதற்கு ஏற்றவை யென்றும், செயற்கைப் பொருள்களைக் கலிப் பொருளாக்குவதென்பது இயல்பாகவே சிரமமானது என்றும் கருதுகிறீர்கள். ஆனால் ஓர் உண்மையை ,