பக்கம்:சமுதாய இலக்கியம்.pdf/25

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

23 தோன்றப் பாட முடியாதென்பதல்ல. பாரதியே தனது கட்டுரை யொன் றில். இனதப் பற்றிப் பேசுகிறான். அவன் எழுதிடம் உல்லாச சபை (1915) என்ற கட்டுரையில், எமீல் வெர் ஹேரன் (Emile Verthaerer) என்ற பெல்ஜியக் கவிஞர் இந்த மாதிரி யந்திரங்களையும் ஆலைகளையும் புகழ்ந்து, அவற்றைக் கவிப் பொருளாக்கிப் பாடுவதைப் பற்றிய ஒரு குறிப்பு வருகின்றது. “வலிமையே அழகு.. ஒரு பொருளின் வெளியுருவத்தைப் பார்த்து. அது அழகா இல்லையா என்று தீர்மானம் செய்ய வாகாது. எந்திரங்களிலே வலிமை நிகழ்கின்றது. ஆதலால் அவை அழகுடையன. அவற்றைக் கவி புகழ்ச்சி செய்தல் தகும் என்பது எமீல் வெர் ஹேரனின் கருத்து. இதே கருத்தைப் பாரதியும் 'காளிதாசன்' என்ற பெயரில் அருமையாக ஆதரிக்கிறான். 'வலிமை ஓர் அழகு, அழகு ஓர் வலிமை. யந்திர ஆலை, நீராவி வண்டி, நீராவிக் கப்பல், வானத் தேர், பெரிய பீரங்கி எல்லாம் அழகுடையன. உயர்ந்த கவிகள் வலிமையுடைய பொருள்களை அவ்வக் காலத்தில் வழங்கிய வரையிலே வர்ணனை செய்து தான் இருக் கிறார்கள். இதிலே புதுமையொன்று மில்லை, என்கிறான் பாரதி. எனவே எதைப் பற்றிப் பாடுகிறோம் என்பது கேள்வி யல்ல; எதைப் பற்றி எப்படிப் பாட வேண்டும் என்பதுதான், எப்படிப் பாடினால் அது கவிதையாகும் என்பது தான் பிரச்னை . அதனைப் புரிந்து கொண்டால் நிலவிலே அழகைக் காண் பதைப் போன்று (நெய்வேலியிலும் அழகைக் காண முடியும்; ஏனெனில் இயற்கை, செயற்கை எதுவாயினும் அது. மனித உணர்ச்சியோடு கலந்து வெளிப்படும்போதுதான் கவிதையா கின்றது. அந்த உணர்ச்சியைப் பெறவும், வளர்க்கவும் தெரிந்து கொண்டால், உங்கள் கேள்விக்கே இடமில்லை. நண்பருக்கு நான் கூறிய பதிலுக்கு ஓர் உதாரணம் போன்று விளங்குகின்றது நான் அறிமுகப்படுத்த முனையும் தந்தி வீடு தூது என்னும் நூல். ஆம், தந்தி விடு தூது ஆசிரியர் பாரதிக்கும் முந்தியவர்; பாரதி விகுதத புதுமைப் பாதையை யெல்லாம் கண்டறியாதவர். எனினும் அவர் தாம்