பக்கம்:சமுதாய இலக்கியம்.pdf/45

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூங்காவி நிறமான பஞ்சக்கச்சம் ஒன்றை அவர் அரையில் உடுத்திக் கொள்கிறார். காதிலே சூரியப் பிரகாசத்தோடு டாலடிக்கும் குண்டலங்கள், கைவிரல்களிலே நவரத்தினங்கள் பதித்த மோதிரங்கள், மார்பிலே உத்திராக்க மணிகள் கோத்த கண்டிகை, நெற்றியிலே மோகன வசிய சக்தி பொருந்திய ஜவ்வாதுப் பொட்டு, தலையிலே ஜரிகைத் தலைப் பாகை, மார்பிலே காஷ்மீரத்துச் சால்வை முதலிய அலங்கா ராதிகளைத் தரித்துக் கொள்கிறார் அவ தானியார்.' - இவ்வாறு ஒப்பனைகள் செய்து முடித்ததும், வாத்தியக் கோஷ்டி சங்கீத முழக்கம் செய்யத் தொடங்குகிறது. நடிகை யும் அவதானியும் தெய்வ வணக்கம் செய்து முடிக்கிறார்கள். பின்னர் அவதானி மேடைமீது சூத்திரதாரனாகத் தோன்றிச் சபைக்கு வணக்கம் செலுத்துகிறார். ராத்ரி சுபாரையில் அரங்கத் தலத்தில் யான் - சூத்ர தாரனாக வந்து தோன்றியே-ஆர்த்த - சபா ஜனத்தை நோக்கி, தயாபரனைப் போற்றிச் சபா வணக்கம் செய்து சபாஷ் என்று அபாரமாய் முத்தமிழின் மாண்பும், இம் மூதுலகில் வாழ்நாட கத்தின் பயனும், கதை முடியும்- இத்தனையும் பாருளோர் பிரமிக்கப் பண்பாய் உபந்யசித்து, சாகும் விதாஷகனைச் சந்தித்து... ஆம். , மேடைமீது ' நாடகாசிரியரே தோன்றி, சபையை வணங்கி, இயல் இசை நாடகத் தமிழின் பெரு மையையும், .. உலகத்திலே . நாடகத்தால் ஏற்படும் நற் பயன்களையும் " பற்றி நீண்டதொரு பிரசங்கம் செய்து, ம்; ஆர்த்த ஓரை : முகூர்த்த ஹாஸ்ய நடிகன்

கூடி.வந்த:, 'வி தூஷகன்;