பக்கம்:சமுதாய இலக்கியம்.pdf/57

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

55 அனந்தம் பேர் மாய்ந்திருக்க, நண்ணியாம் பார்த் திருந்தும் இந்தப் பைத்தியம் ஏன்?” என்று அந்த ஆசை யையும் கைவிடுகிறார். பிறகு புதையல் இருக்குமிடம் காட்டும் மையைப் பெறுவோமா என்று யோசிக்கிறார். பின்னர் அதுவும் பாவச் செயல் எனக் கருதி, விட்டுவிடுகிறார். கடைசியாகத் தமக்குத் தெரிந்த தொழிலைக் கொண்டே நேர்மையாகப் பிழைக்க எண்ணி, நாடகக் கம்பெனிகளுக்குப் பாட்டு எழுதிக் கொடுக்க முனைகிறார், ஆனால் அந்தத் துறையிலோ இரவுபகலாய்க் கண்விழித்ததாம் நோய் தான் மிச்சமாகிறது. பாடிக் கொடுத்தும், பயிற்றுவித்தும், தீம்பாலைத் தேடிக் கமறிலே சிந்தியபோல்-ஓடிவிழ... பஞ்சத்தில் பிள்ளை விற்கும் பாவிகள்போல் பாட்டு விற்றும் கிஞ்சித்தும் பொன் கையில் கிட்டிலையே?” என்று பரிதவிக்கும் நிலைதான் ஏற்படுகிறது. எனவே இனி தெய்வக்கிருபைதான் தமக்கு உதவ முடியும் என்று உணர்கிறார் அவதானி. அதனால் தெய்வங்களிடம் சென்று தமது குறையை முறையிடுகிறார். முக்கியமான ஸ் தலங்களிலெல்லாம் உள்ள சிவன் கோயில்களை நாடுகிறார், ஆனால் ஆண்டியான சிவனா அவருக்கு உதவ முடியும்? ஒற்றியூர்த் தியாகேசன் “என் ஊரே ஒற்றி!" என்று (சொல்லிக் கையை விரிக்கிறார். மயிலைக்கபாலீசுவரரோ

    • நானோ தின்பதற்குச் சோறின்றி, கையில் ஓடேந்தி

நிற்கிறேனே! வேறு தரும். புருஷர்களைப் பார்!” என்று கூறிவிடுகிறார். திருக்கழுக் குன்றத்து வேதகிரி ஈசுவரரோ

  • 'என்னால் கழுகுகளுக்கே இரைபோட்டுச் சமாளிக்க முடிய

வில்லையே!" என்று சொல்லி விடுகிறார். காஞ்சி ஏகாம் பரேசுவரர், அண்ணாமலையார், இரத்தின சபேசன் எல்