பக்கம்:சமுதாய இலக்கியம்.pdf/58

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 லோக்:டி தம்மால் பண உதவி மட்டும் செய்ய இயலாது (எனக் கூறி விடுகிறார்கள் , சிதம்பரத்து நடராஜனைப் நோய்க் காண்கிறார் அவதானி. அவரோ “என் நாட்டியம் 35டியவில்லை. அது முடிந்தபின்னர் தான் யாராவது எனக்குப் Lண உதவி செய்யக் கூடும், அதுவரையில் உன்னால் காத்தி ருக்க இயலாது. போ” என்று வழியனுப்புகிறார். வைத்திய நாது, சுவாமியோ என்னிடம் நோய்க்கு மருந்துண்டு; பசிக்குப் பணம் கிடையாது” என்கிறார். திருக்கடவூர். ஈசனோ 41 உ.மாத்தப் பொன்னுக்குப் பதிலாக, தீர்க்காயிசு வேண்டு 10THS)ல் தருகிறேன்" என்று வரம் கொடுக்கிறார். கடைசியில் திருச்சி வைத்திய லிங்க சுவாமியையும் அவதானி தரிசிக்கிறார். அவரோ பின் வருமாறு கூறி விடுகிறார்: வரகதீஜா! யான் மருத்துவம் செய்து-அரிதாய் அரைக்கண் காலம் கழித்தேன்; தக்க இந்த இங்கிலீஷ் துரைத்தனத்தில் பரீட்சை தோன் ஜி-பெருக்கமாய் டாக்டர் என்றும் சர்ஜன் என்றும் தாம் முளைத்து விட்டதனால் ஆக்ட்டு பலவிதங்கள் ஆனதனால்-பார்க்குள் எனக்குப்'பிழைப்பின்றி இம்மலையில் வாழ்வேன்!” இவ்வாறு உலகத்தில் பிணி போக்கும் மருத்துவர்கள் , பெருகிவிட்டதால் தமக்குப் பிழைப்புப் போய்விட்டது என்கிறார் அவர். மதுரைச் சோமசுந்தரரோ தாமே விறகு சுமந்தும், குதிரை விற்றும், மண் சுமந்தும் பிழைப்பு நடத்து வறாகக் கூறிவிடுகிறார். இறுதியில் அவதானியார் பழனி மலையில் வாழும் பழனியாண்டவனை நாடுகிறார். பழனி யாண்டவனைப் பலவாறாகப் பாராட்டித் தொழுது, தமது துன்பங்களையும் வரலாற்றையும் எடுத்துரைக்கிறார். பழனி யாண்டவனும் பின்வரும் பதிலைத்தான் கூறுகிறார்.