பக்கம்:சமுதாய இலக்கியம்.pdf/59

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

57 44 ஆண்டிமகன் ஆண்டியான்; யாரும் இதை அறிவார்; வேண்டி வந்தாய் வீணாக வேலையற்றே!- ஈண்டுயாள் மாங்கனி ஒன்றிற்கு ஆசைவைத்து, எனக்குக் கிட்டாமல் வாங்கியுண்ணக் காசுமின்றி வந்துறைந்தேன்!” இந்தப் பதிலைக் கேட்டதும் அவதானியார் ஆண்ட வனிடம் பலவாறு முறையிடுகிறார். தமக்கு உதவி செய் தாலன்றி அவரது காலை விடப்போவதில்லை எனக் கூறி, ஆண்டவனைக் கெட்டியாகப் பிடித்துக் கொள்கிறார். கடைசியில் பழனியாண்டவர் தம்மால் உதவி செய்ய முடியா. விட்டாலும், உதவி செய்யக் கூடிய பாட்டுடைத் தலைவர் களான நாட்டுக்கோட்டைச் செட்டியார்களைப்பற்றிக் கூறுகிறார்: தஞ்சை, மதுரை, தனிநாகை, காரைக்கால், விஞ்சும் புதுவை, வியன் சென்னை-மிஞ்சு டில்லி, காசி, பூனா, பம்பாய், கல்கத்தா, வங்காளம் - மோசம் இலாத நெட்டால், மோரீசு-வீசுபுகழ் கண்டி, கதிர்காமம், இலங்கைக் கொழும்பு, நீர்க்கொழும்பு, தொண்டி, யாழ்ப்பாணம், தொழும் காலி-அண்டிய பி னாங்கு, கிளரங்கு, நவிலும் சைகோன், ரங்கோன் ஒங்கும் ஓர்மேன் முதலாம் ஊர்களிலும்... என்று உள்நாட்டிலும் கடல் கடந்த பிரதேசங்களிலும் தனவைசியர்கள் வாணிபம் நடத்தும் பெருமைகளையெல்லாம் எடுத்துரைத்தும், அவர்களது குலப்பெருமையையும், வள்ளல் தன்மையையும் எடுத்துக்கூ றியும், அவதானியாரை அவர் களிடம் அனுப்பி வைக்கிறார் பழனியாண்டவர். " அவதானியாரும் அவ்வாறே நகரத்தார். என்னும் சந்திர குலத், தனவைசியரை அடைந்து, அவர்கள் கொடைத் திறத்