பக்கம்:சமுதாய இலக்கியம்.pdf/63

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண விடு தூது மார்க்கம், ஷேக்ஸ்பியரும் சில நாட்களுக்கு முன்னால், நான் கம்யூனிஸ - சித்தாந் தத்தின் பிதாமகரான கார்ல் மார்க்ஸ் எழுதியுள்ள, சில் கலை இலக்கிய விமர்சனக் கட்டுரைகளைப் படித்துக்கொண் டிருந்தேன். அவற்றில் ஒரு கட்டுரையில், அவர் பணத் தைப்பற்றி இலக்கியத்தில் கூறப்பட்டுள்ளவற்றின் மூலம் பணத்தின் தன்மையைத் தத்துவரீதியாக விளக்கியுள்ளார். அந்தப் பெருமகன் இலக்கியத்தின் மூலம் பணத்தைப் பற்றி என்ன கூறுகிறார் என்பதை அறிந்து கொள்ளும் ஆவல் என்னுள்ளே தானாகவே எழுந்தது. அந்த ஆவ லோடு கட்டுரையைப் படித்துப் பார்த்தேன். அதில் அவர் தமக்குப் பிடித்தமான நாடகக் கவிஞர்களான ஜெர்மானிய தாட்டின் கதே, ஆங்கில நாட்டின் ஷேக்ஸ்பியர் ஆகிய இருவரது நாடகங்களிலும் பணத்தின் தன்மையையும் சக்தியையும் பற்றிக் கூறப்பட்டுள்ள சில வரிகளை மேற்கோள் காட்டி, அதன் பின் அவை குறித்துத் தமது விமர்சனத்தை யும் வியாக்கியானத்தையும் எழுதியுள்ளார். அந்த மேற்கோள்களில் பெரும்பாலான . வரிகள் ஷேக்ஸ்பியர் , எழுதிய 'ஏதன்ஸ் நகரத்து டைமன்” Timon' of Athens) என்ற நாடகத்திலிருந்து எடுக்கப் பட்டவை. கைப்பழக்கம் முதிர்ந்து உலகின் ஆழ்ந்த