பக்கம்:சமுதாய இலக்கியம்.pdf/75

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

23 தாய்த்துணைபோல் எங்கள் தமிழ்ப்பாண்டி, நாடாளா வாய்த்த வேங்கடேச மகிபாலன்! என்று வாயாரப் பாராட்டுகின்றது. , நூல் தோன்றிய காலம் இவ்வாறு பாராட்டப் பெற்ற வெங்கடேசன் மதுரை நாயக்கர்களிடத்தில் மந்திரியாகவும், அவர்களின் ஆட்சிக் குட்பட்ட திருநெல்வேலிச் சீமைக்கு ராஜப் பிரதானியாகவும் இருந்து வந்திருக்கிறார். இதனை, திக்கெல்லாம் வந்து திறையளக்கும் செங்கோன்மைக் சொக்க காதேந்த்ர துரந்தரிகன் - முக்கியமுள்ள பூசுரர்க்குத் தானமிட்டும், பூசைபல செய்தும், இந்தத் ஜேசம்முற்றும் காக்கவந்து சென் மித்து--ராசாரித முத்ரைபெற்ற ரங்ககிருஷ்ண முத்து வீரேந்த்ரன் அருள் வைத்த கொற்ற வாசலுக்கோர் மந்திரியாய்... 5என்று பணவிடு தூது குறிப்பிடுகின்றது. இதிலிருந்து நாம் இந்த நூல் இயற்றப்பட்ட காலத்தை அறுதியிட்டு விடலாம். சொக்கநாத நாயக்கன் என்பான் சரித்திரப் பிரசித்தி பெற்ற திருமலை நாயக்க மன்னனின் பேரன்; இவனது மனைவி தான் சரித்திரப் பிரசித்தி பெற்ற ராணி மங்கம் மாள். சொக்கநாதன் - 1682-ம் ஆண்டில் மறைந்ததும், அவனது மகனான அரங்கஒருஷ்ண முத்துவீரப்பன் ஆட்சி பீடத்துக்கு வந்தான். ஆனால் அவனுக்கு அதிக நாட்கள் ஆட்சி செய்யக் கொடுத்து வைக்கவில்லை. 1889-ம் ஆண்டி - ச.-5.