பக்கம்:சமுதாய இலக்கியம்.pdf/87

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

85 கேட்டு மகிழ்ந்த வேங்கடேசன் அவருக்குப் பல்வேறு வித மான ஆடையாபரணாதிகளைப் பரிசாக அளித்தார், ஏராளமான உபணத்தையும் ரொக்கமாக அளிக்கிறார். 'பரிசிலையும் பணத்தையும் பெற்ற புலவர் அந்தப் பொருளையே தூதுப் பொருளாக்கி, பாமாலை பெற்ற விலைக்குப் பதின் மடங்காய்ச் சீமான் கொடுத்த திரவியமே! - நாமம் பணமே எனப் படைத்த பாக்கியவானே! ஷங் கலாமே? என் ஆருயிரே! கண்ணே ? என்று விளித்து பணத்தின் புகழைப் பாடத் தொடங்கி விடுகிறார். அவ்வாறு தொடங்கியவுடனேயே பண விடு தூதில் ஒரு தனிக்களை கட்டத் தொடங்கி விடுகிறது. - கூகஈய் கரைதன் '. தங்கமாகவும் தங்க மோகராக்களாகவும் காட்சியளிக்கும் செல்வ வளத்தைப் பற்றி முதலில் பாட முனைகிறார் புலவர், தங்கத்தின் சிறப்பைப் பற்றிப் பாட வந்த புலவர் அதனைத் தெய்வங்களுக்குச் சமதையாக உயர்த்திக் காட்டுகிறார். = ஒன்று கேள்! Fஈசன் உனக்கு ஒப்பு என்பார்; ஈசனை உண்டாக்கி, அவன் பூசனை நீ செய்விப்பாய் புண்ணியமா!-பேசுங்கால் மூவர். கடவுளர்கள் ; மூவரில் ஒன்றான தனித். . தேவன் மகிமை தனைச் சென்று ஏத்தற்கு-ஆவது போல் வங்கணமே; வந்துற்ற நண்பனே!)