பக்கம்:சமுதாய இலக்கியம்.pdf/97

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

95 தா கடன் தீர தந்தை தம் நீ.... பணம் என்பது மனிதனை எத்தகைய பேராசைக்கும் சீரழிவுக்கும் ஆளாக்குகிறது என்பதைச் சில சித்திரங்களால் காட்டிவிட்டு, பின்னர் பணத்துக்கும் மனித சமுதாயத் துக்கும் , உள்ள உறவு முறைகளையும், நகைச்சுவையும் நயர் ததும்பப் புலவர் கூறத் தொடங்குகிறார். இந்த இடத்துக்கு வரும்போது, பணவிடுதூது ஆசிரியர் பணத்தைப் பற்றிப் பாடியுள்ள கவிதையும் ஆரோகண கதியில் மேலோங்கத் தொடங்குகிறது. வேலை நெடு ஞாலத்தில் மெல்லியர்க்கெல்லாம் கழுத்தில் மாலையிட வந்த மண வாளனே!- சோலி பண்ணிக் காதலரைத் தப்பிப்போய், கள்ளப் புணர்ச்சி செயும் கோதையருக்கு ஆசைக் கொழுநனே!---ஓங்கு குலம் , தம்தரத்துக்கு ஒவ்வாது தாழ்ந்த சூலம் ஆனாலும் வந்தெடுத்துப் பெண் கொடுக்கும் மாமனே!--நொந்து வருக்கு ஆல் தாழ்ந்த குமனே! கொத்தக் கெட்டவன் கீழ்ப் பெண்டிருக்கும் கிள்ளை மொழி யான் வலிய வட்டமிடும் 6கைச்சரச மச்சானே!-- நட்டனை சேர் கூத்திமாரோடு கோட்டிகொள்ள, நாலிரண்டு பேத்திமார் உள்ளடு பண்ணும் பேரனே!--.நாத்திருந்த ஓதுகலை ஞானம் உள்ளதெலாம் கற்று நன்றாய்ச் - சரதிக்க வைக்கும் தகப்பனே!... பேதிக்கப் போய்க் கொடிய கானம் புகுந்தாலும், அவ்வனத்தில் வாய்க்கினிய சோறூட்டும் மாதாவே!... இவ்வாறு பணத்தை மணவாளன், கொழுநன், மாமன், மச்சான், பேரன், தாய், தந்தை என்ற உறவு நிலைகளிலே பார்க்கும்போதே, பணத்தாசை மனித