பக்கம்:சமுதாய மறுமலர்ச்சி இலக்கியங்கள்.pdf/26

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

24 தவத்திரு குன்றக்குடி அடிகளார்

தகுதி மிகுதியும் உடையவர்கள்! உழைப்பால் மட்டுமே அவர்கள் வாழ விரும்புவார்கள்!

இத்தகைய ஆர்வம் இன்று பலரிடம் இல்லை! இன்று வேலை தேடுகிறார்கள்! வருகைப் பதிவேட்டோடும் ஊதியத்தோடும் தொடர்புடைய வேலையையே விரும்புகிறார்கள்! இவர்களுக்குக் கடின உழைப்பில் நாட்டமில்லை; இத்தகையோர் வேலை தேடு படலத்தில் ஈடுபடுகின்றனர்; உண்மையாக அல்ல — ஒப்புக்காகவே!

சிறுகதை ஆசிரியர் வல்லிக் கண்ணனின் “வாழ விரும்பியவன்” என்ற படைப்பில் ஒரு பகுதி.

“அவர்களுக்கு ‘வேலை’ என்று எதுவுமில்லை. தேடிவந்து சேராத — எங்கே எப்படிக் கிடைக்கும் என்றே தெரியாத — ஏதாவது ஒரு வேலையைத் தேடிக் கொண்டிருப்பதாகத்தான் பாஸ்கரனும் அவனைப் போன்ற நண்பர்களும் சொல்லித் திரிந்தார்கள்” என்று வேலை தேடுவோரின் நிலையை சித்திரித்துக் காட்டுகின்றார் வல்லிக்கண்ணன்.

இத்தகையோரால் நாடு வளருமா? நாட்டு அரசுகள், வேலைவாய்ப்பை உண்டாக்குவதற்கு தமது திட்டங்களில் முன்னுரிமை திந்து வழங்க வேண்டும். அதே நேரத்தில், இளைஞர்களும் காத்துக்கொண்டு இராமல் சுயவேலை வாய்ப்புகளில் ஈடுபட வேண்டும். முன்னுக்கு வரவேண்டும் என்ற துடிப்பு இருந்தால் இன்று எதையும் செய்யலாம். அவ்வளவு வாயில்கள் இன்று அமைந்துள்ளன.