பக்கம்:சமுதாய மறுமலர்ச்சி இலக்கியங்கள்.pdf/28

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

26 தவத்திரு குன்றக்குடி அடிகளார்

கையூட்டு, பண மதிப்பீட்டுச் சமுதாயத்தின் விளைவேயாகும்.

“எப்பாடு பட்டேனும் பணத்தைச் சம்பாதித்துவிடு! அதற்கு அப்புறம் நீ, நீயேதான்” என்கிறது இந்தப் பண மதிப்பீட்டு சமுதாயம்! இப்படிப்பட்ட சமுதாய வளர்ச்சியில் மனிதநேயம் மறக்கப்பட்டு வருகிறது.

பணம் இல்லையானால் இன்று சராசரி வாழ்க்கைகூட வாழ இயலாது. பணம் படைத்தவர்கள் வாழும் மகிழ்ச்சிகரமான வாழ்க்கையைப் பார்த்துப் பலர், அத்தகைய வாழ்க்கையை விரும்புகின்றனர். அவர்களைப் போலவே, தாமும் வாழ ஆசைப்படுகின்றனர்.

அதன் காரணமாக ஜோதிடரை நாடுகின்றனர்; குறிசொல்லுபவனை நாடுகின்றனர்; பரிசுச்சீட்டை நாடுகின்றனர். ஆயினும் முன்னேற்றமில்லை! நேரத்தைக் கழித்ததே மிச்சம்; இதனால், இனம் தெரியாத விலங்கியல் வாழ்க்கை கால்கொள்கிறது. இதோ, முற்போக்குச் சிந்தனையாளர் வல்லிக்கண்ணனின் படைப்பில் ஒரு பகுதி:

“பணமே முக்கியம். பணத்துக்கே மதிப்பு அதிகம் என்ற நிலை ஏற்பட்டுவிட்ட சமுதாய அமைப்பில், ஆசையும் அரிப்பும் பெற்றுள்ள அனைவரும் பணம் தேடுவதிலும், மேலும் மேலும் தேடிக் குவிப்பதிலும் தீவிர வேகம் காட்டுவது இயல்பாகி விட்டது.

பணம் இருந்தால் எதையும் செய்ய முடியும். இஷ்டம்போல் அனுபவித்து வாழ முடியும் என்று வாழ்க்கை கண்முன்னே வெளிச்சமிட்டு மினுக்குகிற போது, துணிச்சல் பெற்றவர்களும், தேவை மிகுந்தவர்-